/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பறக்கும் படை, நிலைக்குழுவில் துணை ராணுவத்தினர் கூடுதலாக சேர்ப்பு; பாரபட்சம் இன்றி சோதனை செய்ய முடிவு

ADDED : ஏப் 06, 2024 04:40 AM
தேனி லோக்சபா தொகுதியில் 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் தேனி மாவட்டத்தில் 4 தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு சட்ட சபை தொகுதியிலும் தலா 9 பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, இரு வீடியோ கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குழுவிலும் வருவாய்த்துறை அலுவலர்கள் தலைமையில் ஒரு எஸ்.எஸ்.ஐ., 3 போலீசார் என 5 பேருடன் இயங்கி வருகிறது.
இக்குழுக்கள் 3 ஷிப்டுகளாக பிரித்து காலை 6:00 மணி முதல் மதியம் 2:00 மணி, மதியம் 2:00 மணி முதல் இரவு 10:00, இரவு 10:00 மணி முதல் காலை 6:00 மணி வரை என பணிபுரிந்து வருகின்றனர்.
இதில் இரவு பணிபுரியும் சில குழுக்கள் சோதனை செய்யாமலர் இருப்பதை தேர்தல் நடத்தும் அலுவலர் கண்டறிந்தார். அக்குழுக்களை கண்டித்தார்.
இந்நிலையில் தேர்தல் பணிக்காக குஜராத்தில் இருந்து 5 படைகளை சேர்ந்த 500 துணை ராணுவத்தினர் வந்துள்ளனர். இவர்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 120 பேர் வீதம் தேர்தல் பணிக்காக பிரித்து அனுப்பட்டுள்ளனர்.
இவர்களில் தலா 4 பேர் பறக்கும்படை, நிலை குழுவில் சேர்க்க அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இவர்கள் குழுவில் இணையும் போது 3 போலீசார் குழுவில் இருந்து நீக்கப்படுவார்கள். துணை ராணுவத்தினர் சோதனைக்குழுக்களில் இணைந்து பணியை துவக்கினர்.
அதிகாரிகள் கூறுகையில், அனைத்து வாகனங்களையும் பாரபட்சமின்றி சோதனை செய்ய துணை ராணுவத்தினருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
இனி அனுமதி பெறாமல் எந்த வாகனத்தில் கொடிகள், சின்னங்கள் இடம்பெற்றிருந்தாலும் அதனை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகளில் தீவிர சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பத்ட்டமான ஓட்டுச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் ரோந்து பணியும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றனர்.