/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'வீக் பாயிண்ட்'டுகளில் சேர்த்து கவனிக்க அ.தி.மு.க. தலைமை ரகசிய உத்தரவு
/
'வீக் பாயிண்ட்'டுகளில் சேர்த்து கவனிக்க அ.தி.மு.க. தலைமை ரகசிய உத்தரவு
'வீக் பாயிண்ட்'டுகளில் சேர்த்து கவனிக்க அ.தி.மு.க. தலைமை ரகசிய உத்தரவு
'வீக் பாயிண்ட்'டுகளில் சேர்த்து கவனிக்க அ.தி.மு.க. தலைமை ரகசிய உத்தரவு
ADDED : ஏப் 15, 2024 01:01 AM
கம்பம், - 'வீக் பாயிண்ட்களில் சேர்த்து கவனிக்கவும்' என அ.தி.மு.க. தலைமை கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் கூறியுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என தி.மு.க. அ.தி.மு.க. பா.ஜ. கூட்டணி முயன்று வருகிறது. அ.தி.மு.க. இரண்டாக பிரிந்துள்ளது. தி.மு.க. அதே கூட்டணியில் தொடர்கிறது. எனவே வெற்றி எளிது என்று தி.மு.க. கருதுகிறது. ஆனால் கள நிலவரம் அப்படி எளிதல்ல என்பதை காட்டுகிறது.
அ.தி.மு.க.,வில் பழனிசாமி பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின் நடைபெறும் பொது தேர்தல் என்பதால், கணிசமான தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும் என்று தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளார்.
குறிப்பாக தேனி மற்றும் ராமநாதபுரம் தொகுதிகளில் தினகரன், ஓ.பி. எஸ். தோற்கடிக்க வேண்டும் என்பதில் தனி கவனம் செலுத்துகிறார்.
அதிலும் தினகரன் வெற்றி பெறக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளார்.
இதற்கென தேனி அ.தி.மு.க. விற்கு ரகசிய தகவல் அ.தி.மு.க., தலைமை நேற்று முன்தினம் அனுப்பியுள்ளது. அதன்படி, தொகுதியில் 'வீக் பாயிண்ட்டுகளில் சேர்த்து கவனிக்கவும் எச்சரிக்கையாக இருங்கள். தி.மு.க. பா.ஜ. அ.ம.மு.க. என்ற மூன்று கட்சிகளின் கழுகு பார்வை நம்மீது இருக்கும். நாராயணசாமி வெற்றி பெற வேண்டும். அதே சமயம் தினகரன் வெற்றி பெறக் கூடாது என கூறப்பட்டுள்ளது.

