/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குக்கர் சின்னத்திற்கு அளிக்கும் ஓட்டு தேனி தொகுதி வளர்ச்சிக்கான ஓட்டு: பெரியகுளத்தில் அனுராதா பிரசாரம்

ADDED : ஏப் 09, 2024 12:21 AM

பெரியகுளம் : 'குக்கர் சின்னத்திற்கு அளிக்கும் ஓட்டு தேனி தொகுதியின்வளர்ச்சிக்கான ஓட்டு என அ.ம.மு.க., வேட்பாளர் தினகரன் மனைவி அனுராதா பெரியகுளம் பகுதியில் பிரசாரம் செய்து பேசினார்.
பெரியகுளம் ஒன்றியம், ஸ்டேட் பேங்க் காலனி,கரட்டூர், பெருமாள்புரம், வைத்தியநாதபுரம், பெரியகுளம் நகராட்சி அரண்மனை தெரு, அழகர்சாமிபுரம், சௌராஷ்ட்ரா சத்திரம், மூன்றாந்தல் பகுதியில் பா.ஜ., கூட்டணி அ.ம.மு.க., வேட்பாளர் தினகரனின் மனைவி அனுராதா பேசியதாவது:
குக்கர் சின்னத்துக்கு ஒவ்வொருவரும் போடும் ஓட்டு, தேனி லோக்சபா தொகுதியின் அடிப்படை, வளர்ச்சிக்கான ஓட்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். 14 ஆண்டுகளுக்கு பின் எனது கணவர் வேட்பாளராக நிற்கிறார்.
அவரை தமிழகத்திலே அதிகம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்து, தேனி லோக்சபா தொகுதியிலே வைத்துக் கொள்ளுங்கள்.
அவர் என்னோடும், எங்களது 'மகள் ஜெயஹரிணியோடு' இருந்த நாட்களை விட உங்களோடு இருந்த நாட்களே அதிகம். நான் உங்களை சந்திப்பது 'பூர்வ ஜென்ம பந்தம்'.
இங்கு வந்துள்ளவர்கள், வீட்டில் இருக்கும் வயதில் மூத்தவர்கள், முதல் வாக்காளர்களிடம் குக்கர் சின்னத்திற்கு ஓட்டு போடச் சொல்லுங்கள். கடந்த முறை இந்தப்பகுதியில் நிற்கும் போது தினகரன் வேறோரு சின்னத்தில் நின்றார். எனவே குக்கர் என்றால் தினகரன், தினகரன் என்றால் குக்கர் என்பதை மனதில் பதியம் போட்டுக் கொள்ளுங்கள். தமிழகத்தில் கூட்டணி கட்சிகள் பிரசாரத்திற்கு தினகரன் வெளியூர் சென்றுள்ளார். உங்களை எல்லாம் சந்திக்க வருவார் என்றார்.
வழி நெடுகிலும் மலர் தூவிமும், ஆரத்தி, பூர்ணகும்பம் எடுத்து மக்கள் வரவேற்றனர். போடாங்குளம் பகுதியைச் சேர்ந்த மூன்று மாதம் ஆண் குழந்தைக்கு ஜெயஹரன் என பெயர் சூட்டினார்.--