/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வீரபாண்டி சித்திரை திருவிழா நாளை கம்பம் நடும் விழா மே 7 முதல் மே 14 வரை திருவிழா

ADDED : ஏப் 16, 2024 05:04 AM
தேனி: தேனி அருகே வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாதிருவிழாவிற்கான திருக்கம்பம் நடுதல் விழா நாளை(ஏப்.,17) நடக்கிறது.
வீரபாண்டு கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தென்மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற விழாவாக கொண்டாடப்படும். திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளாவில் இருந்து பக்தர்கள் வருகை தருவர்.
திருவிழா நாளில் தினமும் ஒரு லட்சம் பக்தர்கள் திரள்வார்கள். இந்தாண்டு கோயில் திருவிழாவிற்கான திருக்கம்பம் இன்றிரவு கோயிலுக்கு கொண்டு வரப்படுகிறது. அம்பாள் கோயில் வீட்டில் இருந்து கரகத்துடன் ஊர்வலமாக கோயிலுக்கு வருகிறார். நாளை காலை கண்ணீஸ்வர முடையார் கோயில் ஆற்றங்கரையில் இருந்து திருக்கம்பம் கோயிலில் நடுதல் விழா நடக்கிறது. தொடர்ந்து தினமும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மே7 ல் திருவாபரணப்பெட்டி கோயில் வீட்டில் இருந்து கோயிலுக்கு வரும் நிகழ்வுடன் திருவிழா துவங்குகிறது. மே 10ல் தேர் வடம்பிடித்தல் நடக்கிறது. மே 13ல் தேர் நிலைக்கு வருகிறது. மே 14ல் ஊர் பொங்கலுடன் திருவிழா நிறைவடைகிறது.