/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஓடையில் கொட்டப்படும் குப்பை தீ வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு
/
ஓடையில் கொட்டப்படும் குப்பை தீ வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு
ஓடையில் கொட்டப்படும் குப்பை தீ வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு
ஓடையில் கொட்டப்படும் குப்பை தீ வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு
ADDED : ஏப் 21, 2024 05:16 AM

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம் போடிதாசன்பட்டியில் நீர்வரத்து ஓடையில் குப்பை கொட்டுகின்றனர். கொட்டப்படும் குப்பையில் தீ வைப்பதால் பாலம், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து மழைக்காலத்தில் வரும் நீர் போடிதாசன்பட்டி சிற்றோடை வழியாக சென்று பிச்சம்பட்டி கண்மாயில் சேர்கிறது.
போடிதாசன்பட்டியில் சேரும் குப்பையை அப்பகுதி மக்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் ஓடையில் கொட்டுகின்றனர். குவிந்த குப்பையில் தீ வைத்து செல்கின்றனர். தொடர்ந்து நடக்கும் இச்செயலால் சுற்றுச்சூழலுக்கும், பாலத்திற்கும் பாதிப்பு ஏற்படுகிறது. நீர்வரத்து ஓடையும் குப்பையால் அடைபடுகிறது. ஓடையில் குப்பை கொட்டுதல், தீ வைத்தல் இரு நிகழ்வுகளையும் தவிர்க்க போடிதாசன்பட்டி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.