/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பா.ஜ.,கூட்டணி தேர்தல் பணியில் ஒருங்கிணைப்பு அவசியம்
/
பா.ஜ.,கூட்டணி தேர்தல் பணியில் ஒருங்கிணைப்பு அவசியம்
பா.ஜ.,கூட்டணி தேர்தல் பணியில் ஒருங்கிணைப்பு அவசியம்
பா.ஜ.,கூட்டணி தேர்தல் பணியில் ஒருங்கிணைப்பு அவசியம்
ADDED : ஏப் 07, 2024 05:38 AM
ஆண்டிபட்டி : தேனி லோக்சபா தொகுதி பா.ஜ., கூட்டணியில் அ.ம.மு.க., வேட்பாளராக தினகரன் போட்டியிடுவதால் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.
ஆண்டிபட்டி சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை பகுதிகளில் நூறுக்கும் மேற்பட்ட கிராமங்களில் தினகரன் மேற்கொண்ட பிரசாரத்தில் பா.ஜ., நிர்வாகிகள் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தினகரன் பிரசாரத்திற்கு வராத நாட்களில் தொகுதியில் தேர்தல் பணிகள்,வாக்காளர் சந்திப்பது குறித்து எந்தவித ஒருங்கிணைப்பு பணிகளும் இல்லை.
இதனைத் தொடர்ந்து பா.ஜ.,வினர் அந்தந்த பகுதியில் வீடு வீடாக நோட்டீஸ் கொடுத்து ஓட்டு கேட்டு பிரசாரம் செய்கின்றனர். நேற்று கண்டமனூரில் ஆண்டிபட்டி சட்டசபை தொகுதி பா.ஜ., பார்வையாளர் பாலு, பொறுப்பாளர் லிங்கப்பன், ஒன்றிய தலைவர்கள் கருப்பசாமி, மணிகண்டன் உட்பட பலர் வீடு வீடாக சென்று பிட்நோட்டீஸ் வினியோகித்து தினகரனுக்கு ஆதரவாக பிரசாரத்தை துவக்கி உள்ளனர்.
தொகுதியின் பல்வேறு இடங்களிலும் இதே நிலை உள்ளது. பா.ஜ., கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஒருங்கிணைந்த தேர்தல் பிரசாரத்திற்கு அ.ம.மு.க.,வினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

