ADDED : மார் 31, 2024 03:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி, : ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்கு குன்னுார் வைகை ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைத்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
ஆற்றில் இருந்து மதுரை ரோடு வழியாக செல்லும் குடிநீர் சிட்கோவில் உள்ள மேல்நிலை தொட்டியில் ஏற்றப்படுகிறது. பின் அங்கிருந்து குழாய் மூலம் சார்நிலை கருவூலம், தோட்டக்கலை அலுவலகம், புது பஸ் ஸ்டாண்ட் வழியாக ஊஞ்சாம்பட்டி ஊராட்சி பகுதிகளுக்கு செல்லப்படுகிறது. இந்த குழாயில் தேனி சார்நிலை கருவூலம் அருகே உடைப்பு ஏற்பட்டு குடிநீர் தேங்கியுள்ளது. இதே போல் குழாய் உடைந்து குடிநீர் விணாவது தொடர்கிறது.
ரோட்டின் மேல்பகுதியில் செல்லும் குழாயை பள்ளம் தோண்டி பதித்து கொண்டு செல்ல ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

