/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஒயர் மீது மரக்கிளை விழுந்து கோயிலில் மின்தடை
/
ஒயர் மீது மரக்கிளை விழுந்து கோயிலில் மின்தடை
ADDED : மே 21, 2024 07:51 AM

பெரியகுளம் : பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் ஹிந்து அறநிலையைத்துறைற்கு உட்பட்டது. கோயில் வளாகத்தில் உப கோயிலான அழகு நாச்சியம்மன் கோயில் உள்ளது. பாலசுப்பிரமணியர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அழகு நாச்சியம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம் .
முக்கிய நாட்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்வர். நேற்று முன்தினம் காற்றுடன் மழை பெய்ததில் கோயில் வளாக மரக்கிளை விழுந்ததில் மின் ஒயர் சேதமானது. இதனால் மின்தடை ஏற்பட்டது. நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் இருட்டில் சுவாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. பக்தர்கள் கோயில் அலுவலகத்தில் தெரிவித்தும் பயன் இல்லை. மீண்டும் மின்லைன் சீரமைத்து சப்ளை வழங்க கோயில் செயல்அலுவலர் ஹரிஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

