/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
அ.தி.மு.க.,வை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனார்கள்: இ.பி.எஸ்., பேச்சு
/
அ.தி.மு.க.,வை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனார்கள்: இ.பி.எஸ்., பேச்சு
அ.தி.மு.க.,வை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனார்கள்: இ.பி.எஸ்., பேச்சு
அ.தி.மு.க.,வை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனார்கள்: இ.பி.எஸ்., பேச்சு
ADDED : ஜன 28, 2024 12:24 PM

தஞ்சாவூர்: அ.தி.மு.க.,வை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனார்கள் என தஞ்சாவூரில் நடந்த நிகழ்ச்சியில் அக்கட்சி பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பேசினார்.
மேலும், அவர் பேசியதாவது: அ.தி.மு.க.,வை இனி எந்த கொம்பனாலும் ஒன்றும் செய்ய முடியாது. இது எம்.ஜி.ஆர்., தோற்றுவித்த இயக்கம், ஜெயலிலதா கட்டி காத்த இயக்கம். அந்த இரு பெரும் தலைகளும் இறைவனின் சக்தி பெற்றவர்கள். எனவே, நமக்கு யார் கெடுதல் நினைத்தாலும், அவர்கள் தான் கெட்டு போவார்கள். இந்த இயக்கத்தை அழிக்க நினைத்தார்கள், அழிந்து போனார்கள்.
நிச்சயம் ஆட்சி
அ.தி.மு.க., எதிர்காலத்தில் நிச்சயம் ஆட்சிக்கு வரும். எவ்வளவு கவர்ச்சிக்கரமான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டு எட்டு மாதங்களாகியும் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ஒரு சில வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டு, திராவிட மாடல் ஆட்சி என சொல்லிக்கொண்டு இருக்கும் முதல்வர் ஸ்டாலின், நுாறு சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்துக்கொண்டு இருக்கிறார். மக்களுக்கு எல்லாம் இது நல்லவே தெரியும். விஞ்ஞான உலகம் யாரையும் ஏமாற்ற முடியாது.
குடும்பக் கட்சி
தி.மு.க.,வை பொறுத்தவரை அது குடும்பக் கட்சி. அந்த குடும்பத்தில் இருப்பவர்களுக்கு ஆட்சிக்கு அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பது தான் குறிக்கோள். மக்களை பற்றி கவலை கிடையாது. தி.மு.க., கட்சி இல்லை கார்ப்பரேட் கம்பெனி. கம்பெனியில் தான் லாபம், நஷ்டம் பார்பார்கள். தற்போது ஆட்சியில் எவ்வளவு லாபம் கிடைக்கும். எவ்வளவு ஊழல் செய்ய முடியும் என்பது தான் நோக்கம். தி.மு.க., விவசாயிகளை எதிரிகளை போல பார்க்கிறது. வரும் லோக்சபா தேர்தலில் தி.மு.க., அரசுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

