/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
கொளுத்தும் வெயிலில் 'ரெயின்கோட்': அமைச்சர் செழியன் 'தொலைநோக்கு'
/
கொளுத்தும் வெயிலில் 'ரெயின்கோட்': அமைச்சர் செழியன் 'தொலைநோக்கு'
கொளுத்தும் வெயிலில் 'ரெயின்கோட்': அமைச்சர் செழியன் 'தொலைநோக்கு'
கொளுத்தும் வெயிலில் 'ரெயின்கோட்': அமைச்சர் செழியன் 'தொலைநோக்கு'
UPDATED : ஏப் 08, 2025 07:23 AM
ADDED : ஏப் 08, 2025 06:39 AM

தஞ்சாவூர் : மழைக்காலம் துவங்க பல மாதங்கள் உள்ள நிலையில், கொளுத்தும் வெயிலில், பால் வியாபாரிகளுக்கு அமைச்சர் கோவி. செழியன், 'ரெயின் கோட்' வழங்கியது பேசு பொருளாகியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுார் எம்.எல்.ஏ., அலுவலகத்தில், நேற்று முன்தினம் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், தன் சொந்த நிதியிலிருந்து, 130 பால் விற்பனையாளர்களுக்கு ரெயின் கோட் வழங்கினார்.
மழைக்காலம் துவங்க இன்னும் பல மாதங்கள் உள்ள சூழலில், கொளுத்தும் வெயிலில் ரெயின் கோட் வழங்கியது, தொகுதி மக்களிடையே நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.
'அமைச்சர் இதுபோன்று, 'தொலைநோக்கு' எண்ணத்துடன் திட்டங்களை செயல்படுத்தினால், தொகுதி இன்னும் சிறப்பாக இருக்கும்' என, பொதுமக்கள் கிண்டலடித்து வருகின்றனர்.