/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
தி.மு.க., - எம்.எல்.ஏ., கார் மோதி விவசாயி உயிரிழப்பு
/
தி.மு.க., - எம்.எல்.ஏ., கார் மோதி விவசாயி உயிரிழப்பு
தி.மு.க., - எம்.எல்.ஏ., கார் மோதி விவசாயி உயிரிழப்பு
தி.மு.க., - எம்.எல்.ஏ., கார் மோதி விவசாயி உயிரிழப்பு
ADDED : டிச 17, 2025 05:53 AM

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே, தி.மு.க., - எம்.எல்.ஏ., கார் மோதி, விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே தென்னமநாடு, நடுத்தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 65. இவர், பைக்கில் நேற்று மதியம், வீட்டில் இருந்து வயலுக்கு செல்ல, தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை சாலையில் சென்றார்.
அப்போது, தி.மு.க., மத்திய மாவட்ட செயலரும், திருவையாறு எம்.எல்.ஏ.,வுமான சந்திரசேகரன், ஒரத்தநாடு பகுதியில் கட்சி நிர்வாகி வீட்டில் பட திறப்பு நிழ்ச்சியை முடித்து விட்டு, மீண்டும் தஞ்சாவூருக்கு காரில் சென்றார். காரை, திருவையாறு அருகே ஒலதேராயன்பேட்டையை சேர்ந்த செந்தில், 38, என்பவர் ஓட்டினார்.
குறுக்கு சாலையில் இருந்து கோவிந்தராஜ் பைக் பிரதான சாலையின் குறுக்கே புகுந்த நிலையில், அவர் மீது கார் மோதாமல் தவிர்க்க, டிரைவர் காரை வலதுபுறம் திருப்பினார்.
இதில், சாலை தடுப்பில் மோதிய கார், கோவிந்தராஜ் பைக் மீதும் மோதியது. இதில், துாக்கி வீசப்பட்ட அவர் எதிர்திசை சாலையில் விழுந்து படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார். ஒரத்தநாடு போலீசார், கோவிந்தராஜ் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர். விபத்தில், எம்.எல்.ஏ.,வும் காயமடைந்தார்.
இறந்த கோவிந்தராஜின் தம்பி கதிர்வேல், தி.மு.க., முன்னாள் பஞ்., தலைவர். இவர், நவ., 5ம் தேதி பஸ் மோதி இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

