/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
பந்தல் தொழிலாளி கொலை வழக்கில் நபருக்கு 'ஆயுள்'
/
பந்தல் தொழிலாளி கொலை வழக்கில் நபருக்கு 'ஆயுள்'
ADDED : ஏப் 25, 2024 02:23 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், கீழவழி நடப்புபை சேர்ந்த செல்வராஜ், 34, என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வைத்திலிங்கம் குடும்பத்திற்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் முன்விரோதம் இருந்தது.
இந்நிலையில், முல்லை நகரை சேர்ந்த பந்தல் அமைப்பாளர் அய்யப்பனும், வைத்திலிங்கம் மகன் செந்திலும் நண்பர்கள். இதனால் அய்யப்பனிடம், செல்வராஜ் அடிக்கடி தகராறு செய்ததால் முன்விரோதம் ஏற்பட்டது.
கடந்த 2017ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி, கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் நின்றிருந்த அய்யப்பனை, அங்கு வந்த செல்வராஜ் தகராறில் ஈடுபட்டு கத்தியால் குத்தினார். இதில், அய்யப்பன் இறந்தார். அய்யப்பன் சகோதரர் பாஸ்கரன் புகாரின்படி, செல்வராஜை பாபநாசம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு, கும்பகோணம் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராதிகா, குற்றம்சாட்டப்பட்ட செல்வராஜுக்கு ஆயுள் தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

