/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
சிலை திருட்டு வழக்கு நீதிமன்றம் மாற்ற வழக்கறிஞர்கள் எதிர்ப்பு
/
சிலை திருட்டு வழக்கு நீதிமன்றம் மாற்ற வழக்கறிஞர்கள் எதிர்ப்பு
சிலை திருட்டு வழக்கு நீதிமன்றம் மாற்ற வழக்கறிஞர்கள் எதிர்ப்பு
சிலை திருட்டு வழக்கு நீதிமன்றம் மாற்ற வழக்கறிஞர்கள் எதிர்ப்பு
ADDED : மே 17, 2024 09:11 PM
தஞ்சாவூர்:தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற சிலை திருட்டு வழக்குகள், கும்பகோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள, கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டன. இந்நிலையில், சிலை திருட்டு தொடர்பான வழக்குகள், கும்பகோணத்தில் இருந்து பிரித்து, சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலுார், பெரம்பலுார், கடலுார், திருச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற சிலை திருட்டு வழக்குகள் ஏற்கனவே, கும்பகோணம் நீதிமன்ற சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டன.
இந்த மாவட்ட வழக்குகளை, கும்பகோணம் நீதிமன்றத்திலேயே மீண்டும் விசாரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் விவேகானந்தன் தலைமையில், நுாற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நேற்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
வக்கீல்கள் கூறியதாவது:
தமிழகத்தில் அதிகப்படியான கோவில்கள் டெல்டா மாவட்டங்களில் தான் உள்ளன. இப்பகுதியில் தான் அதிக கோவில்களில் சிலைகள் திருட்டு போயின. இந்நிலையில், சென்னை மற்றும் மதுரை நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணை நீதிமன்றத்தை மாற்றுவதால், எந்த பயனும் இல்லை. எனவே, சிலை திருட்டு வழக்குகளை வழக்கம் போல, கும்பகோணத்தில் உள்ள நீதிமன்றத்திலேயே தொடர்ந்து விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தனர்.

