/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
தி.மு.க., கொடி கம்பம் அகற்றம் கட்சியினர் மீது வழக்குப்பதிவு
/
தி.மு.க., கொடி கம்பம் அகற்றம் கட்சியினர் மீது வழக்குப்பதிவு
தி.மு.க., கொடி கம்பம் அகற்றம் கட்சியினர் மீது வழக்குப்பதிவு
தி.மு.க., கொடி கம்பம் அகற்றம் கட்சியினர் மீது வழக்குப்பதிவு
ADDED : மார் 23, 2024 01:47 AM
தஞ்சாவூர்:திருச்சி மற்றும் பெரம்பலுார் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை முதல்வர் ஆதரித்து நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அதன் பின், தஞ்சாவூர் மற்றும் நாகை லோக்சபா தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து, திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் இன்று பிரசாரம் செய்கிறார்.
இதையடுத்து, நேற்று தஞ்சாவூருக்கு வரும் முதல்வர் ஸ்டாலினை வரவேற்கும் விதமாக, தி.மு.க.,வினர் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து திருவாரூர் செல்லும் சாலை வரை கட்சி கொடி கம்பங்களை நேற்று முன்தினம் இரவு நட்டனர்.
இந்நிலையில், தேர்தல் விதிகளை மீறி தி.மு.க.,வினர் செயல்படுவதாக, புகார் எழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கொடி கம்பங்களை அகற்ற கட்சியினருக்கு தெரிவித்தனர்.
எனினும், தி.மு.க., வினர் எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.
இதையடுத்து கலெக்டர், எஸ்.பி., உத்தரவின்படி, நேற்று அதிகாலைக்குள் கொடி கம்பங்கள் அகற்றப்பட்டன. மேலும், தி.மு.க., நிர்வாகிகள் சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

