/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
புகார் அளிக்க சென்ற மூவர் மீது தாக்குதல் ஒருவர் பலி; -இரண்டு பேர் படுகாயம்
/
புகார் அளிக்க சென்ற மூவர் மீது தாக்குதல் ஒருவர் பலி; -இரண்டு பேர் படுகாயம்
புகார் அளிக்க சென்ற மூவர் மீது தாக்குதல் ஒருவர் பலி; -இரண்டு பேர் படுகாயம்
புகார் அளிக்க சென்ற மூவர் மீது தாக்குதல் ஒருவர் பலி; -இரண்டு பேர் படுகாயம்
ADDED : ஏப் 02, 2024 09:46 PM
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே ஆழிவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், 59. இறால் பண்ணை உரிமையாளர். இவரது உறவினர் பசுபதி கோவிலை சேர்ந்த செந்தில்.
செந்திலுக்கும், அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் ஒரு வாரத்துக்கு முன் தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக அய்யம்பேட்டை போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜெயக்குமார், செந்தில் மற்றும் காட்டுக்குறிச்சியை சேர்ந்த பிரவீன், 28, ஆகிய மூவரும் தஞ்சாவூர் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளிக்க நேற்று முன் தினம் சென்றனர்.
ஆனால், அங்கிருந்த அதிகாரிகள், அய்யம்பேட்டை போலீசில் புகார் அளிக்க வேண்டும் என மூவரையும் திருப்பி அனுப்பினர். அவர்கள் காரில் அய்யம்பேட்டைக்கு சென்று கொண்டுஇருந்தனர்.
அப்போது, பசுபதிகோவில் அருகே சிலர் காரை வழிமறித்தனர். ஜெயக்குமார், செந்தில், பிரவீன் ஆகிய மூவரையும் சரமாரியாக தாக்கி விட்டு தப்பினர்.
பலத்த காயமடைந்த மூவரும் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பரிசோதனை செய்த டாக்டர்கள் ஜெயக்குமார் மரணம் அடைந்து விட்டதை உறுதி செய்தனர். படுகாயம் அடைந்த செந்தில் மற்றும் பிரவீனுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து அய்யம்பேட்டை போலீசார், வழக்கு பதிவு செய்து கொலை செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

