ADDED : மார் 09, 2024 08:32 AM
சிவகங்கை : சிவகங்கையில் அனைத்து துறைகளிலும் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் முன்னிலை வகித்தார். குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் முத்துக்கண்ணு மகளிர் தின பாடல் பாடினார். பேச்சாளர் தேவகோட்டை ராமநாதன் மகளிரின் பெருமைகளை பேசினார். பரத நாட்டிய ஆசிரியை சுபலட்சுமி நிகழ்ச்சியை நடத்தினார்.
இங்கு, தபால் துறை சார்பில் மகளிருக்கான சேமிப்பு திட்டங்கள் குறித்த விளக்க கண்காட்சி இடம் பெற்றது.
* சிவகங்கை அரசு மகளிர் கல்லுாரியில் பேரவை துவக்க விழா மற்றும் மகளிர் தின விழா நடந்தது. தமிழ் துறை தலைவர் ராஜலட்சுமி வரவேற்றார். முதல்வர் இந்திரா தலைமை வகித்தார்.
அரசு மருத்துவ கல்லுாரி டீன் கே.சத்யபாமா சிறப்புரை ஆற்றினார். மாணவி கே.சுவாதி நன்றி கூறினார். பேரவை தலைவராக சக்திஸ்ரீ, துணை தலைவர் ஜி.சுவாதி, ஒருங்கிணைப்பாளர்கள் கவிதா, புனிதாராணி, பொருளாளர் சந்தியா ஸ்ரீ, செயலாளர் காயத்ரி, அழகுலட்சுமி, செயலாளர்கள் ஆர்த்தி, புவனா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
* சிவகங்கை நகராட்சியில் மகளிர் தின விழா தலைவர் துரை ஆனந்த் தலைமையில் நடந்தது. நகராட்சி பெண் அலுவலர், ஊழியர்கள் பங்கேற்றனர். கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
* சிவகங்கை தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிருக்கான சேமிப்பு திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர். கோட்ட கண்காணிப்பாளர் மாரியப்பன் தலைமை வகித்தார். அரசு மருத்துவமனை டாக்டர் தங்கம், மகளிருக்கு யோகா பயிற்சி அளித்தார்.
மானாமதுரை: மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் மகளிர் தின விழாவை பணியாளர்கள் மற்றும் கவுன்சிலர்களோடு சேர்ந்து கேக் வெட்டி கலெக்டர் ஆஷா அஜித் கொண்டாடினார்.
கமிஷனர் ரெங்கநாயகி, பொறியாளர் சீமா,பணித்தள பொறுப்பாளர் பவித்ரா, மானாமதுரை ஊராட்சி ஒன்றிய தலைவர் லதா அண்ணாதுரை மற்றும் பெண் கவுன்சிலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.
காரைக்குடி: காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளியில் நடந்த மகளிர் தின விழாவை பள்ளி தாளாளர் சத்தியன் தொடங்கி வைத்தார். நிர்வாக இயக்குனர் சங்கீதா தலைமையேற்றார்.
டாக்டர் சுகன்யா, மாவட்ட லயன்ஸ் கிளப் இயக்குனர் துர்கா தேவி கலந்து கொண்டனர். இயக்குனர் ராஜேஸ்வரி ஒருங்கிணைத்தார். முதல்வர் சங்கர சுப்பிரமணியன் வரவேற்றார். துணை முதல்வர் சுபாஷினி நன்றி கூறினார்.
அமராவதி புதுார் சாரதா நிகேதன் மகளிர் கல்லுாரியில் மகளிர் தின விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் சிவசங்கரி ரம்யா, இயக்குனர் மீனலோச்சனி தலைமையில் நடந்தது.
தொழில் நுட்பவியல் துறை உதவி பேராசிரியர் ராஜராஜேஸ்வரி வரவேற்றார்.
நிகழ்ச்சியில், காரைக்குடி மார்க்கெட்டிங் மேனேஜர் ஹரிஹரசுதன், மானகிரி அப்பல்லோ மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் ஸ்ரீஹரிணி பேசினர்.
பூவந்தி: பூவந்தி அருகே அரசனுார் பாண்டியன் சரஸ்வதி யாதவ பொறியியல் கல்லுாரியில் சர்வதேச மகளிர் தின விழா சரஸ்வதி பாண்டியன் தலைமையில் நடந்தது.
விழாவில் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், பல்வேறு துறைகளில் தடம் பதித்தவர்களுக்கும் பரிசு, சான்றிதழை கலெக்டர் ஆஷாஅஜித் வழங்கினார்.
தேவகோட்டை: தேவகோட்டை நகராட்சிக் கூட்டம் தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடந்தது. கூட்டம் முடிந்தவுடன் கூட்ட அரங்கில் பெண் கவுன்சிலர்கள் மகளிர் தினத்தை கொண்டாடினர். தலைவர் சுந்தரலிங்கம் துணை தலைவர் ரமேஷ் முன்னிலையில் கமிஷனர் பார்கவி, கவுன்சிலர்களுடன் இணைந்து கேக் வெட்டினார். கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
தேவகோட்டை: தேவகோட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மகளிர் தின விழா நகராட்சி கமிஷனர் பார்கவி தலைமையில் நடந்தது.
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் நிரோஷா முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை வணக்கம்மேரி வரவேற்றார். ஆசிரியர்கள் முத்து மீனாட்சி, ஹேமலதா, ஜெசிந்தா மேரி உட்பட ஆசிரியைகள், மாணவிகள் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
* சருகணி இதயா மகளிர் கல்லுாரியில் கல்லுாரி தினம் மகளிர் தினம் சாமான்ய பெண்களின் சரித்திரம் என்ற தலைப்பில் சிவகங்கை பிஷப் லுார்து ஆனந்தம் தலைமையில் நடந்தது. முதல்வர் ஜோதிமேரி வரவேற்றார். புதுச்சேரி சபை மாகாணம் ஜெயா மேரி, குழந்தை இயேசு மாநில தலைவர் சபின்மேரி, பொருளாளர் அன்செலம்மேரி.
குழந்தை தெரசா, வக்கீல் தெசாண்டல், சருகணி பங்கு பாதிரியார் ஜேம்ஸ், கல்லுாரி தலைவர் ஜெயராணி, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பக்கீர் முகைதீன், கண்ணதாசன், பிரகாசம் பேசினர்.

