/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வாணியங்குடியில் வீணாகும் குடிநீர்
/
வாணியங்குடியில் வீணாகும் குடிநீர்
ADDED : பிப் 19, 2024 05:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை அருகே வாணியங்குடி ஊராட்சியில் குடிநீர் குழாயில் பல மாதங்களாக குடிநீர் விரயமாகி வருகிறது.
வாணியங்குடி ஊராட்சியில் 1500 பேர் வரை வசிக்கின்றனர். இங்குள்ள மக்கள் மானாமதுரை ரோட்டில் ஊராட்சி அலுவலகம் அருகில் உள்ள குடிநீர் குழாயில் வரக்கூடிய தண்ணீரை தான் குடிப்பதற்கு பயன்படுத்துகின்றனர்.
இந்த குடிநீர் குழாய் சேதம் அடைந்து பல மாதங்களாக குடிநீர் விரயமாகிறது. சேதமான குடிநீர் குழாயை சீரமைத்து, குடிநீரை சேமிக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

