/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வறட்சியிலும் வற்றாத வைரவன் ஊருணி
/
வறட்சியிலும் வற்றாத வைரவன் ஊருணி
ADDED : பிப் 15, 2024 05:28 AM

எஸ் புதுார்: எஸ்.புதுார் ஒன்றியத்தில் வறட்சி காலத்திலும் வற்றாத வைரவன் ஊருணி தண்ணீர் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.
இவ்வொன்றியத்தில் கிழவயல் ஊராட்சி பொன்னடப்பட்டி கிராமத்தில் முத்து விநாயகர் கோயில் முன்பாக பழமையான வைரவன் ஊருணி உள்ளது. மூன்று ஏக்கர் பரப்பு கொண்ட இவ்வூரணியை சுற்றி பழங்கால கற்களால் அடுக்கப்பட்டு சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. இப்பகுதியை சுற்றியுள்ள மலைத்தொடர்களில் இருந்து நிலத்தடி நீரோட்டமாக ஓடிவரும் தண்ணீர் இந்த ஊருணியில் தேங்குகிறது.
வறட்சி காலத்திலும் கூட இந்த ஊருணியில் தண்ணீர் வற்றுவது கிடையாது. இந்த ஊரணி தண்ணீரே அப்பகுதி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. ஒன்றியத்தில் இதே போல் இயற்கையாக அமைந்த பழமையான ஊருணிகள் ஏராளமாக இருந்தாலும் அவற்றிற்கு நிலத்தடி நீரும்,மழைநீரும் வந்து சேர முடியாதவாறு ஆக்கிரமிப்பு பெருகிவிட்டன.
ஊருணிகள் முறையான பராமரிப்பு செய்யப்படாததால் வறண்டு கிடக்கின்றன. எனவே வைரவன் ஊருணியை போல் ஒன்றியத்தின் அனைத்து ஊருணிகளையும் பராமரிக்க வேண்டும்.

