ADDED : மே 09, 2025 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை தாலுகா சவேரியார் பட்டினம் சிறுவத்தி பகுதியில் அனுமதியின்றி மண் அள்ளுவதாக கிடைத்த தகவலை அடுத்து வி.ஏ.ஓ., அப்பகுதியை பார்வையிட்டார்.
மண் அள்ளும் இயந்திரம் மூலம் டிராக்டரில் அனுமதி இன்றி மண் அள்ளிக் கொண்டு இருந்ததை பார்த்து திருவேகம்புத்தூர் போலீசில் புகார் செய்தார்.
டிராக்டர் டிரைவர் இளங்குடி காளிமுத்து மகன் சுரேஷ் 30. இயந்திர டிரைவர் பழநியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் மணிகண்டன் 47 இருவரையும் போலீசார் கைது செய்து இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

