/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நிரம்பியது திருப்புவனம், திருப்பாச்சேத்தியில் கிணறுகள் * தண்ணீர் கையிருப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
/
நிரம்பியது திருப்புவனம், திருப்பாச்சேத்தியில் கிணறுகள் * தண்ணீர் கையிருப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
நிரம்பியது திருப்புவனம், திருப்பாச்சேத்தியில் கிணறுகள் * தண்ணீர் கையிருப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
நிரம்பியது திருப்புவனம், திருப்பாச்சேத்தியில் கிணறுகள் * தண்ணீர் கையிருப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஜன 02, 2024 05:23 AM

திருப்புவனம்; வைகை ஆற்றில் தொடர் நீர்வரத்து காரணமாக திருப்புவனம் தாலுகாவில் உள்ள பெரும்பாலான திறந்த வெளி, ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
திருப்புவனம் தாலுகாவில் 1956 திறந்த வெளி கிணறுகளும், 566 ஆழ்துளை கிணறுகளும் உள்ளன. வைகை ஆற்றை ஒட்டிய பகுதிகளில் பெரும்பாலும் 100 முதல் 150 அடியிலேயே நீர் வந்து விடும். விவசாயிகள் திறந்த வெளி கிணறு அமைத்து வாழை, தென்னை, கரும்பு உள்ளிட்டவைகளை பயிரிடுவர். கிணறுகளில் வறட்சி காலங்களில் தண்ணீர் இல்லாத நிலையில் கிணறுகளின் பக்கவாட்டில் போர்வெல் அமைத்து ஊற்றுகளை விவசாயிகள் உருவாக்கியுள்ளனர்.
வறட்சி காலங்களில் வைகை ஆற்றை ஒட்டியுள்ள கிணறுகளில் மட்டும் நீர்மட்டம் ஓரளவிற்கு இருக்கும் மற்ற பகுதிகளில் 400 அடி தோண்டினாலும் தண்ணீர் கிடைப்பது இல்லை. கடந்த மூன்று மாத காலமாக வைகை ஆற்றில் நீர்வரத்து இருந்ததால் திருப்பாச்சேத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள திறந்த வெளி கிணறு நிரம்பி கைக்கு எட்டும் தூரத்தில் உள்ளன. சில கிணறுகளில் தண்ணீர் வெளியேறி வருகின்றன.கண்மாய்களில் தொடர்ச்சியாக தண்ணீர் நிரம்பி இருப்பதால் கிணறுகளில் ஊற்றுகளில் தண்ணீர் ஊறி வெளியேறி வருகிறது.
விவசாயி ராஜாராம் கூறுகையில்: திருப்பாச்சேத்தி பகுதியில் 100க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகள் உள்ளன. கடந்த சில வருடங்களாக நீர்மட்டம் குறைந்து வந்துள்ள நிலையில் பத்து வருடங்களுக்கு பின் கிணறுகளில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. கைக்கெட்டும் துாரத்தில் இருப்பதால் விவசாய பணிகளை முழுமையாக நம்பி செய்ய முடியும். கண்மாய்களிலும் இன்னும் குறைந்த பட்சம் ஆறு மாதங்கள் தண்ணீர் இருக்க வாய்ப்புண்டு. இன்னும் மூன்று வருடங்களுக்கு விவசாய பயன்பாட்டிற்கு தண்ணீர் தாராளமாக கிடைக்கும்.
திருப்புவனம் வட்டாரத்தில் கண்மாயை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகளில் தண்ணீர் நிரம்பியுள்ள நிலையில் சற்று தள்ளியுள்ள கிணறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது. இந்தாண்டு வைகை ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் விவசாயம் முழுமையாக நடைபெறும் என விவசாயிகள் கருதுகின்றனர்.

