/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
விளைநிலத்தை மூழ்கடித்த கண்மாய் தண்ணீர்
/
விளைநிலத்தை மூழ்கடித்த கண்மாய் தண்ணீர்
ADDED : டிச 23, 2025 05:39 AM

திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தி அருகே வேம்பத்துாரில் ஷட்டர் பழுது காரணமாக கண்மாய் தண்ணீர் வெளியேறியதால் 80 ஏக்கர் நெல் வயல்களில் தண்ணீர் சூழ்ந்தது.
ஆயிரத்து 58 ஏக்கர் பரப்பளவுள்ள கானுார் கண்மாயை நம்பி கானுார், கல்லுாரணி, வேம்பத்துார், பச்சேரி உள்ளிட்ட பகுதி களில் இரண்டாயிரத்து 800 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கானுார் கண்மாயில் 60 சதவிகிதம் தண்ணீர் நிரம்பியுள்ளது.
கானுார் கண்மாயில் இருந்து வேம்பத்துாருக்கு செல்லும் பாசன கால்வாய் மடை சேதமடைந்ததால் கடந்த ஒரு வாரமாக தண்ணீர் வெளியேறி வேம்பத்துாரில் உள்ள 80 ஏக்கர் பரப்பளவுள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நெல் நாற்றுகள் அழுக தொடங்கின.
கானுார் கண்மாயில் இருந்து வேம்பத்தூருக்கு திறக்கப்படும் தண்ணீர் ஏந்தல் கண்மாயில் சென்று சேர்ந்து கலுங்கு வழியாக வெளியேறும், ஏந்தல் கண்மாய் கலுங்கும் சேதமடைந்ததால் தண்ணீர் வெளியேற வழியின்றி விவசாய நிலங்களில் தேங்கி விட்டது.
விவசாயி சங்கர் கூறுகையில், ஏக்கருக்கு 18 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து நெல் பயிரிட்டுள்ளோம், கானூர் க ண்மாய் மடை கடந்தாண்டே சேதமடைந் திருந்தது. சரி செய்ய கோரிக்கை விடுத்தும் கண்டு கொள்ளவே இல்லை.
கண்மாய்க்கு நீர் வரத்து காரணமாக மடை சேதமடைந்ததால் அதிகப்படியான தண்ணீர் வேம்பத்துார் வந்து வெளியேற வழியின்றி விவசாய நிலங்களில் தேங்கி நிற்கிறது.
கண்மாயில் மடைகளையும் அடைக்க முடியவில்லை, விவசாய நிலங்களில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றவும் முடியவில்லை, ஒரு வாரமாக தண்ணீர் நிற்பதால் நாற்றுகள் அழுக தொடங்கி யுள்ளன, என்றார்.
பொதுப் பணித்துறை உதவி பொறியாளர் அழகுராஜா கூறுகை யில், பச்சேரி விவசாயிகள் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. வேம்பத்தூரில் பாதிப்பு பற்றி கேள்விப்பட்ட உடன் தண்ணீரை நிறுத்தி விட்டோம், ஏந்தல் கண்மாய் மானாமதுரை நீர்வளத் துறைக்கு சொந்த மானது, எனவே அந்த பகுதி அதிகாரிகளிடம் தண்ணீர் வடிய நட வடிக்கை எடுக்க சொல்லியுள்ளோம், என்றார்.

