/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அனுமதியின்றி சிலை வைக்க முயற்சி தாசில்தார் பறிமுதல்
/
அனுமதியின்றி சிலை வைக்க முயற்சி தாசில்தார் பறிமுதல்
அனுமதியின்றி சிலை வைக்க முயற்சி தாசில்தார் பறிமுதல்
அனுமதியின்றி சிலை வைக்க முயற்சி தாசில்தார் பறிமுதல்
ADDED : பிப் 07, 2024 01:42 AM
தேவகோட்டை:சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நடராஜபுரம் இரண்டாவது வீதியைச் சேர்ந்தவர் ஜெயராமன் 50.
இவர் வீட்டின் முன்பு தேவேந்திர குல வேளாளர் அமைப்பின் நிர்வாகி பசுபதி பாண்டியன் சிலை வைக்க முடிவு செய்தார். வீட்டையொட்டி சிலை வைக்க பீடம் அமைக்கும் பணியில் ஈடுபட்டார். இத்தகவல் எஸ்.பி., மற்றும் வருவாய்த்துறைக்கும் தகவல் சென்றது.
நேற்று மாலை டி.எஸ்.பி., பார்த்திபன், போலீசார், தாசில்தார் அசோக்குமார் தலைமையில் வருவாய்த்துறையினர் அங்கு சென்று விசாரித்தனர். ஜெயராமன் அதிகாரிகளிடம் தனது சிலை என கூறியுள்ளார்.
சந்தேகப்பட்ட அதிகாரிகள் வீட்டிற்குள் இருந்த சிலையை பார்த்த போது பசுபதி பாண்டியன் சிலை என தெரிந்தது. மேலும் சிலை வைக்க உரிய அனுமதி பெறவில்லை எனவும் ஜெயராமன் தெரிவித்தார். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் சிலையை தாசில்தார் பறிமுதல் செய்தார்.