/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வெயிலால் பக்கவாதம் வர வாய்ப்பு அதிகம்: மதியம் வெளியே வருவதை தவிர்க்கலாம்
/
வெயிலால் பக்கவாதம் வர வாய்ப்பு அதிகம்: மதியம் வெளியே வருவதை தவிர்க்கலாம்
வெயிலால் பக்கவாதம் வர வாய்ப்பு அதிகம்: மதியம் வெளியே வருவதை தவிர்க்கலாம்
வெயிலால் பக்கவாதம் வர வாய்ப்பு அதிகம்: மதியம் வெளியே வருவதை தவிர்க்கலாம்
ADDED : ஏப் 11, 2024 06:42 AM

நமது உடல் அதிக வெப்ப நிலையை வேர்வை மூலம் வெளியேற்றி சமநிலைக்குக் கொண்டு வரும். ஆனால் வெப்ப பக்கவாதம் பாதிக்கப்படும் போது நமது உடல் அதைச் செய்யத் தவறிவிடும். மாரடைப்பை போன்று திடீரென்று உயிரைப் பறிக்கும் மற்றொரு பாதிப்பு இந்த வெப்ப பக்கவாதம்.
நன்றாகப் பேசிக்கொண்டிருக்கும்போதே சட்டென்று மயங்கி விழுந்து, இறக்கும் நிலையும் ஏற்படும். இது கோடை காலத்தில் சர்வ சாதாரணமாக நிகழும். கோடை வெப்பத்தை நமது உடல் தாங்காமல் பலர் இவ்வாறு உயிரிழக்கவும் நேரிடலாம். இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 100-க்கும் மேற்பட்டோர் வெப்ப பக்கவாதத்தால் உயிரிழக்கின்றனர்.
காப்பது எப்படி
தற்போது கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில் ஹீட் ஸ்ட்ரோக்வராமல் தற்காத்துக் கொள்வது குறித்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டாக்டர் கிருஷ்ணராஜன் கூறுகையில், சாதாரணமாக நமது உடல் வெப்பம் 38 டிகிரி செல்சியஸ் அளவிற்குள் இருக்கும்.
சூரிய வெப்பத்திற்கு ஆட்படும்போதும் உடல் தானாகவே தன்னை சரி செய்து கொள்ளும். தற்போது அதிகரித்து வரும் வெப்பத்தால் உடலின் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் அதிகரித்து சாதாரணவெப்ப நிலையை தானாகவே கையாள முடியாத நிலையை ஏற்படுத்தும். இந்த ஹீட் சார்ந்த நோய் அலுவலகமின்றி வெளிப்புற அமைப்புகளில் பணிபுரிபவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் அதிகம் உள்ளது.
இந்நிலையை உடனடியாக சரி செய்யவில்லை என்றால் இது மற்ற உறுப்புகளுக்கும் சேதம் விளைவிப்பதோடு மரணத்திற்கும் வழிவகுக்கலாம். தற்போது இந்தியாவில் ஹீட் ஸ்ட்ரோக் சார்ந்த இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
முக்கிய அறிகுறிகள்
வேர்வையின்மையுடன்சிவந்த, சூடான, அல்லது வறண்ட சருமம்.மூச்சுத்திணறல், மயக்கம், சோர்வு, குமட்டல்,வாந்தி, தலைவலி, அதிக இதய துடிப்பு, குழப்பம், எரிச்சலுாட்டும் தன்மை.
ஹீட் ஸ்ட்ரோக் கால்அதிகமாக கைக் குழந்தைகள், முதியவர் கள், வெளிப்புற பணியாளர்கள்,பருமனான நபர்கள், மன நோய் உடையவர்கள், மது அருந்துபவர்கள், போதிய திரவ உணவினை எடுத்துகொள்ளாதவர்களுக்க நீர்ச்சத்து குறைவால் இது ஏற்படும்.
கண்டறியும் முறைசிகிச்சை முறை
இந்த ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டவர்களை சரிசெய்ய அவர்களை நிழலான மற்றும் குளிர்ச்சியான இடத்திற்கு மாற்றவேண்டும். அதன் பிறகு ஈரமான துண்டுகளையோ அல்லது விசிறியினையோ உபயோகப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களின் உடல் வெப்பநிலையை குறைக்க வேண்டும்.
சாத்தியமானால், அக்குள் மற்றும் இடுப்பு பகுதியில் ஐஸ் கட்டிகளை வைக்கலாம். இந்த முதன்மையான கவனிப்புகளுக்கு பிறகு பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்தல் அவசியம்.
மருத்துவமனையில் நோயாளியின் நிலையினை பொறுத்து மருத்துவர் தேவையான சிகிச்சை செய்வார். உடல் வெப்ப நிலை இயல்பான வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் அடையும் வரை மருத்துவர்கள் உடல் வெப்பநிலையை குறைப்பதற்கு வேண்டிய சிகிச்சையை தொடர்வார்கள்.
பதுகாத்து கொள்ள தண்ணீர் நிறைய குடிப்பதன் மூலம் முறையான நீரேற்றத்தை பராமரித்தல் வேண்டும். மெலிதான, தளர்வான ஆடைகளை அணிதல் வேண்டும்.சூரிய ஒளியில் குறைந்த நேரத்தை செலவிடுதல் வேண்டும்.
குறிப்பாக அதிக வெப்பம் இருக்கும் நேரமான மதியம் 12:00 முதல் மதியம் 3:00 மணி வரை தொப்பி அல்லது ஸ்கார்ப் அணிதல் அல்லதுகுடையைப் பயன்படுத்துதல் வேண்டும்.

