/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காற்று இல்லாத சைக்கிள் வெயிலில் தவித்த மாணவிகள்
/
காற்று இல்லாத சைக்கிள் வெயிலில் தவித்த மாணவிகள்
ADDED : மார் 14, 2024 03:54 AM

திருப்புவனம்: திருப்புவனம் அரசு பெண்கள் பள்ளியில் நேற்று மாணவிகளுக்கு வழங்கப்பட்ட இலவசசைக்கிளில் காற்று இல்லாததால் கொளுத்தும் வெயிலில் மாணவிகள் தள்ளியபடியே சென்றனர்.
திருப்புவனம் அரசு பெண்கள் பள்ளியில் அல்லிநகரம், லாடனேந்தல் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து இரண்டாயிரத்து 63 மாணவிகள் பயில்கின்றனர்.
இதில் 11ம் வகுப்பு பயிலும் 420 மாணவிகளுக்கு நேற்று இலவசசைக்கிள் வழங்கும் விழா எம்.எல்.ஏ., தமிழரசி தலைமையில் நடந்தது. தலைமையாசிரியை லலிதா வரவேற்றார்.
பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவில் மாணவிகளுக்கு வழங்கப்பட்ட எந்த சைக்கிளிலும் காற்று இல்லை. இதனால் மாணவிகள் பலரும் கொளுத்தும் வெயிலில் சைக்கிளை தள்ளியபடியே சென்று கடைகளில் காற்று பிடித்து சென்றனர்.
பணமில்லாத மாணவிகள் வீடு வரை சைக்கிளை தள்ளியபடியே சென்றனர். புதிய பொருள் வாங்கும் போது ஒரு வருடம் உத்தரவாதத்துடன் வழங்கப்படும், அரசு சார்பில் வழங்கப்படும் சைக்கிளில் காற்று கூட நிரப்பாமல் தந்த விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

