/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரவுடிகளை கைது செய்ய சிவகங்கையில் அனைத்து ஸ்டேஷன்களிலும் தனிப்படை
/
ரவுடிகளை கைது செய்ய சிவகங்கையில் அனைத்து ஸ்டேஷன்களிலும் தனிப்படை
ரவுடிகளை கைது செய்ய சிவகங்கையில் அனைத்து ஸ்டேஷன்களிலும் தனிப்படை
ரவுடிகளை கைது செய்ய சிவகங்கையில் அனைத்து ஸ்டேஷன்களிலும் தனிப்படை
ADDED : மே 04, 2025 06:17 AM
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் தொடர் குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகளை கைது செய்ய ஸ்டேஷன் வாரியாக தனிப்படையை மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ்ராவத் துவக்கியுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் 49 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. சிவகங்கை, மானாமதுரை, காரைக்குடி, திருப்புத்துார், தேவகோட்டை உட்பட 5 சப் டிவிஷன்களாக இந்த போலீஸ் ஸ்டேஷன்கள் பிரிக்கப்பட்டுள்ளது.
இதில் அதிக குற்றச்சம்பவங்கள் நடைபெறும் இடங்களாக சிவகங்கை, மானாமதுரை, தேவகோட்டை சப் டிவிஷன்கள் உள்ளன.
இங்குள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் அதிக குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களின் விவரங்கள் தனிப்பிரிவு போலீசார் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இதில் தொடர் கொலை, கொள்ளை, அடிதடி, கஞ்சா விற்பனை போன்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை கைது செய்ய எஸ்.பி., உத்தரவிட்டார்.
ஸ்டேஷன் வாரியாக தனியாக தனிப்படையை போலீசார் அமைத்து ஒவ்வொரு ஸ்டேஷன் எல்கைக்கு உட்பட்ட இடங்களில் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.