/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சோலார் உலர் கூடம், களம் திறப்பு விழா கலெக்டர் ஆஷா அஜித் பங்கேற்பு
/
சோலார் உலர் கூடம், களம் திறப்பு விழா கலெக்டர் ஆஷா அஜித் பங்கேற்பு
சோலார் உலர் கூடம், களம் திறப்பு விழா கலெக்டர் ஆஷா அஜித் பங்கேற்பு
சோலார் உலர் கூடம், களம் திறப்பு விழா கலெக்டர் ஆஷா அஜித் பங்கேற்பு
ADDED : டிச 23, 2024 05:00 AM

சிவகங்கை: இளையான்குடி, திருப்புத்துாரில் சோலார் உலர் கூடம் மற்றும் திறந்த வெளி களத்தை கலெக்டர் ஆஷா அஜித் துவக்கி வைத்தார்.
சிவகங்கை வேளாண் விற்பனை, வணிக துறை சார்பில் சின்ஜெண்டா நிறுவன சமூக பொறுப்பு நிதியின் கீழ் இளையான்குடி அருகே அரியாண்டிபுரத்தில் ரூ.14 லட்சத்தில் சோலார் உலர் மையமும், திருப்புத்துார் அருகே செண்பகம்பேட்டையில் ரூ.11 லட்சத்தில் உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு களம் அமைத்து தரப்பட்டுள்ளது.
இவற்றை கலெக்டர் திறந்து வைத்தார். அரியாண்டிபுரம் சோலார் உலர் மையத்தில் குண்டு மிளகாய், கத்தரி உள்ளிட்ட காய்கறிகளை உலர்த்தி கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சின்ஜெண்டினா நிறுவனம், ேஹண்ட் இன் ேஹண்ட் தொண்டு நிறுவனம் மூலம் கண்மாய் துார்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக சோலார் உலர் கூடம், களத்தை அமைத்துள்ளனர். இந்நிறுவனம் மூலம் மிளகாய், மல்லி, நெல் கொள்முதல் செய்து, ஆன்லைனில் விற்பனை செய்து, ரூ.15.5 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளனர்.
திருப்புத்துார் அருகே செண்பகம்பேட்டையில் ஆவுடைய விநாயகர் உழவர் உற்பத்தியாளர் குழு மூலம் தேங்காய், மட்டை, கொப்பரை, நார், கருணை கிழங்கு, நிலக்கடலை, புளி, நெல்லை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து, ஆன்லைனில் விற்பனை செய்து தருகின்றனர்.
அந்த வகையில் கடந்த 5 ஆண்டில் ரூ.74.63 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளனர். ரூ.2 கோடி வரை வர்த்தகம்செய்து, ரூ.12 லட்சம் லாபம் பெற்றுள்ளன. இதற்கான பங்கு தொகை பங்குதாரர்களான விவசாயிகளுக்கு பிரித்து வழங்கினர்.
வேளாண் விற்பனை, வணிக கமிஷனர் அலுவலக இணை இயக்குனர் அமுதன், சிவகங்கை துணை இயக்குனர் தமிழ்செல்வி, சின்ஜெண்டினா நிறுவன இயக்குனர் வைத்தியநாதன், ேஹண்ட் இன் ேஹண்ட் தொண்டு நிறுவன துணை தலைவர் கண்ணன், இளையான்குடி உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குனர் சுந்தர், ஆவுடைய விநாயகர் உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குனர் அழகர்சாமி, வேளாண் அலுவலர்கள் கனிமொழி, புவனேஸ்வரி, உதவி வேளாண் அலுவலர் ரத்தினகாந்தி பங்கேற்றனர்.

