/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மதிப்பு கூட்டல் பயிற்சியில் ஈர்த்த சிறுதானிய ஐஸ்கிரீம்
/
மதிப்பு கூட்டல் பயிற்சியில் ஈர்த்த சிறுதானிய ஐஸ்கிரீம்
மதிப்பு கூட்டல் பயிற்சியில் ஈர்த்த சிறுதானிய ஐஸ்கிரீம்
மதிப்பு கூட்டல் பயிற்சியில் ஈர்த்த சிறுதானிய ஐஸ்கிரீம்
ADDED : செப் 19, 2024 04:56 AM

காரைக்குடி: செட்டிநாடு மானாவாரி ஆராய்ச்சி நிலையத்தில் நடந்த பயிற்சியில் சிறுதானியத்தில் தயார் செய்யப்பட்ட ஐஸ்கிரீம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
காரைக்குடி அருகே உள்ள செட்டிநாடு மானாவாரி வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் சிறுதானிய மதிப்பு கூட்டல் பயிற்சி நடந்தது. இதில் மயிலாடுதுறை திருவாரூர் திருநெல்வேலி தஞ்சாவூர் திண்டிவனம் திருவண்ணாமலை தேனி மதுரை விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
பயிற்சியை பேராசிரியர் பாபு தொடங்கி வைத்தார். ஊட்டச்சத்து நிபுணர் கமல சுந்தரி ஒருங்கிணைத்து பயிற்சி அளித்தார். இதில் சிறுதானியங்களை ஒரு தொழிலாக எடுத்துச் சென்று சந்தையில் பிரபலமாக உள்ள சிறு தானிய உணவு வகைகளான நூடுல்ஸ், சூப் மிக்ஸ், சத்துமாவு, சிறுதானிய சாக்லேட் உள்ளிட்ட பொருட்கள் செய்முறை விளக்கம் மூலம் காண்பிக்கப்பட்டது.
இதில், கேழ்வரகு மற்றும் கம்பு மூலம் தயாரான சிறுதானிய ஐஸ்கிரீம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

