sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 புறக்காவல் நிலையம் இல்லாத சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி டாக்டர்கள் எதிர்பார்ப்பு

/

 புறக்காவல் நிலையம் இல்லாத சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி டாக்டர்கள் எதிர்பார்ப்பு

 புறக்காவல் நிலையம் இல்லாத சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி டாக்டர்கள் எதிர்பார்ப்பு

 புறக்காவல் நிலையம் இல்லாத சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி டாக்டர்கள் எதிர்பார்ப்பு


ADDED : டிச 25, 2025 05:43 AM

Google News

ADDED : டிச 25, 2025 05:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் தொடர் திருட்டு, பயிற்சி டாக்டரை தாக்கும் செயல் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால் புறக்காவல் நிலையம் அவசியம் அமைக்க வேண்டுமென டாக்டர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 24 மணி நேரமும் தீவிர சிகிச்சை, மகப்பேறு, குழந்தைகள் நலம் உள்ளிட்ட சிறப்பு சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் பிற பகுதியில் உள்ள நோயாளிகளும், அருகில் உள்ள ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சிகிச்சைக்காக தினசரி 1000க்கும் மேற்பட்டவர்கள் வருகின்றனர்.

மருத்துவமனையில் 500 மாணவர்கள் படிக்கின்றனர். 250 டாக்டர்கள், 380 செவிலியர்கள், 450 பல்நோக்கு பணியாளர்கள் பணிபுரிகின்றனர். உள்நோயாளிகளாக 800 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களின் உறவினர்களும் சிகிச்சை முடியும் வரை மருத்துவமனையில் தங்கும் சூழல் உள்ளது.

தாய்வார்டிற்கு வரும் நோயாளிகளுக்கு 24 மணிநேரமும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எப்போதும் பரபரப்பாக இருக்கும் நிலையை பயன்படுத்தி அடிக்கடி திருட்டு சம்பவம் நடந்து வருகிறது. அலைபேசி, டூவீலர் ஸ்டாண்டில் நிறுத்தப்படும் டூவீலர்கள், நோயாளிகளின் பணம் திருடுபோகிறது.

இவற்றை கட்டுப்படுத்த மருத்துவமனையில் போதிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதில்லை என டாக்டர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

டாக்டர்கள் கூறுகையில், மருத்துவமனை தாய்வார்டில் பகலில் இரண்டு போலீசாரும் இரவில் 2 போலீசாரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இவர்கள் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் முதல் தகவல் அறிக்கையும், அவர்களின் விவரங்களை வாங்குவதில் தான் கவனம் செலுத்துகின்றனர்.

அவர்களால் தாய்வார்டை விட்டுவிட்டு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மற்ற இடங்களுக்கு செல்ல முடியாது. இவற்றை பயன்படுத்தி தான் மருத்துவமனையில் குற்றங்கள் நடக்கிறது. மருத்துவமனையில் புறக்காவல் நிலையம் ஆரம்பிக்க வேண்டும்.

எப்போதும் 4க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவேண்டும். தாய்வார்டில் கண்டிப்பாக ஒரு பெண் காவலரையும் பணியில் அமர்த்த வேண்டும். மருத்துவமனைக்குள் வரும் டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை கண்காணிக்க வேண்டும். இரவு நேரத்தில் மருத்துவமனை வளாகத்தில் ரோந்து பணியில் ஈடுபடவேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us