/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிங்கம்புணரி பஸ் ஸ்டாண்டில் எஸ்.ஐ., தற்கொலை முயற்சி
/
சிங்கம்புணரி பஸ் ஸ்டாண்டில் எஸ்.ஐ., தற்கொலை முயற்சி
சிங்கம்புணரி பஸ் ஸ்டாண்டில் எஸ்.ஐ., தற்கொலை முயற்சி
சிங்கம்புணரி பஸ் ஸ்டாண்டில் எஸ்.ஐ., தற்கொலை முயற்சி
ADDED : ஜன 09, 2024 11:17 PM

சிங்கம்புணரி:சிங்கம்புணரி பஸ் ஸ்டாண்டில் எஸ்.ஐ., விஷம் குடித்து தற் கொலைக்கு முயன்றார்.
சிவகங்கை மீனாட்சி நகரை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் 53. சிங்கம்புணரி போலீஸ் எஸ்.ஐ.,ஆக உள்ளார். நேற்று காலை 10:00 மணிக்கு அங்குள்ள பஸ் ஸ்டாண்டில் பாதுகாப்பு பணியில் இருந்தார். அங்கு வந்த மனைவி தங்கத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பாக்கெட்டில் வைத்திருந்த விஷத்தை குளிர்பானத்தில் கலந்து குடித்துள்ளார். இதை கவனித்த மனைவி, சக போலீசார் அவரை சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மதுரை தனியார் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார்.
எஸ்.ஐ., பாலசுப்ரமணியன் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதனால் மனைவியுடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. எதற்கான விஷம் குடித்தார் என மேல் விசாரணை நடக்கிறது.