/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அய்யனார் கோயிலில் செப்.4 கும்பாபிேஷகம்
/
அய்யனார் கோயிலில் செப்.4 கும்பாபிேஷகம்
ADDED : ஆக 30, 2025 11:45 PM
திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே காட்டாம்பூரில் தர்மபுல்லணி அய்யனார் கோயில் கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது.
இக்கோயிலில் திருப்பணி வேலைகள் செய்தனர். செப்.4 ல் கும்பாபிஷேகம் நடத்த உள்ளனர். ஆக. 29 மாலை முதல் யாகசாலையில் கணபதி, நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி பூஜைகள் நடந்து வருகிறது. இன்று காலை மகாலட்சுமி ேஹாமம், மாலையில் பிரவேச பலியும் நடைபெறும்.
நாளை மாலையில் முதற்கால யாக பூஜையும், செப்.2 ல் இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜையும், செப்.3 ல் நான்காம் மற்றும் ஐந்தாம் கால யாகபூஜை நடைபெறும். செப்.4 காலையில் ஆறாம் காலயாக பூஜை நிறைவடைந்த பின்னர், காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள் கும்பாபிேஷகம் நடைபெறும்.

