/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தீத்தான்பேட்டையில் பள்ளி கட்டடம் தயார்; 2 ஆண்டாக சமுதாய கூடத்தில் நடக்கும் வகுப்பு

UPDATED : பிப் 07, 2025 05:40 AM
ADDED : பிப் 07, 2025 05:17 AM

மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தீத்தான்பேட்டை கிராமத்தில் உள்ள அரசு துவக்க பள்ளியில் 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.2 ஆசிரியர்கள் பணியாற்றி வரும் நிலையில் பள்ளி கட்டடம் மிகவும் சேதமடைந்ததை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.29 லட்சம் செலவில் புதிய பள்ளி கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.
நேற்று வரை புதிய பள்ளி கட்டடத்தை திறக்காமல் சமுதாய கூடத்தில் போதிய வசதிகள் இன்றி பள்ளி நடைபெறும் அவலம் நீடிப்பதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
பெற்றோர்கள் சிலர் கூறியதாவது: புதிய பள்ளி கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு தற்போது வரை அந்த கட்டடத்தை திறக்காமல் அதிகாரிகள் தாமதப்படுத்தி வருவதினால் மாணவர்கள் சமுதாய கூடத்தில் போதிய வசதிகள் இல்லாமல் படிக்கும் நிலை நீடித்து வருகிறது. மாணவர்களின் கல்வி திறன் பாதிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர்.