/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஸ்டேஷன் மாஸ்டரிடம் வழிப்பறி: 3பேர் கைது
/
ஸ்டேஷன் மாஸ்டரிடம் வழிப்பறி: 3பேர் கைது
ADDED : மார் 21, 2024 02:08 AM
திருப்புவனம்: மதுரை -பரமக்குடி 4 வழிச்சாலையில் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரிடம் வழிப்பறி செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை சிலைமான் ரயில் நிலைய மாஸ்டராக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஹி மான்பு மதுகர் விமல் 29, பணியாற்றி வருகிறார். மதுரை ரிங் ரோட்டில் இருந்து ஷேர் ஆட்டோவில் சிலைமான் வந்தவரை மணலுார் அருகே கடத்தி சென்று மிரட்டி அலைபேசி, பணத்தை ஆட்டோ டிரைவர் உட்பட மூன்று பேர் பறித்து சென்றது. திருப்புவனம் போலீசார் வழக்கு பதிந்து மதுரையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அருண்குமார் 20, வசந்த குமார் 20, 16 வயது சிறுவன் மூன்று பேரை கைது செய்தனர். வழிப்பறிக்காக அருண்குமார் கடந்த 3 மாதங்களுக்கு முன் இந்த ஆட்டோவை விலைக்கு வாங்கி உள்ளார். போலீசார் ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.

