/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நாட்டார்மங்கலத்தில் நிழற்கூரை பயனில்லாமல் விபத்து அபாயம்
/
நாட்டார்மங்கலத்தில் நிழற்கூரை பயனில்லாமல் விபத்து அபாயம்
நாட்டார்மங்கலத்தில் நிழற்கூரை பயனில்லாமல் விபத்து அபாயம்
நாட்டார்மங்கலத்தில் நிழற்கூரை பயனில்லாமல் விபத்து அபாயம்
ADDED : செப் 28, 2024 06:39 AM

திருப்புத்துார், : திருப்புத்துாரிலிருந்து- மதுரை செல்லும் ரோட்டில் உள்ள நாட்டார்மங்கலத்தில் திறந்த வெளி பயணியர் நிழற்கூரை அமைக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்புத்துாரிலிருந்து மேலுார் செல்லும் ரோட்டை நெடுஞ்சாலைத்துறையினர் இருவழிச்சாலையாக மேம்படுத்தினர். அப்போது திருப்புத்துாருக்கு புறவழிச்சாலை கோட்டையிலிருப்பிலிருந்து அமைக்கப்பட்டது. இந்த புறவழிச்சாலையில் நாட்டார்மங்கலம் விலக்கு அருகில் பஸ் நிறுத்தம் உள்ளது. பயணியர் நிழற்கூரை ரோட்டோரத்தில் இல்லாமல் சற்று தள்ளி உள்ளது. பஸ் வருவது தெரியாமல் பயணிகள் பஸ் ஏறுவதில் சிரமமாக உள்ளது.
இதனால் பயணிகள் பயணியர் கூடத்தை பயன்படுத்த முடியவில்லை.
ரோட்டிலேயே பஸ்சிற்காக காத்திருக்கின்றனர். அருகில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ,மாணவியர், ஆசிரியர்கள் பஸ்சிற்காக ரோட்டிலேயே காத்திருக்க வேண்டியுள்ளது.
பஸ்சும் ரோட்டில் நின்று பயணிகளை ஏற்ற வேண்டியுள்ளது.
வேகமாக வாகனங்கள் செல்வதால்
அப்பகுதியில் விபத்து அபாயம் காணப்படுகிறது.
ரோட்டை அகலப்படுத்தி புதியதாக பயணியர் கூடம் அமைக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

