/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் மழை முன்னெச்சரிக்கை ஆய்வு
/
திருப்புத்துாரில் மழை முன்னெச்சரிக்கை ஆய்வு
ADDED : டிச 12, 2024 05:11 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் தாலுகாவில் மழை பாதிப்பை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர்.
திருப்புத்துார் பகுதியில் பல கண்மாய்களில் 60 லிருந்து 70 சதவீதம் நீர் உள்ளது. வானிலை அறிவிப்பாக டிச.12 லிருந்து மூன்று நாட்கள் மழை பெய்யும் வாய்ப்புள்ளதால் கண்மாய் பெருகி வெளியேறும் வாய்ப்புள்ளது.
இதனையடுத்து சப் கலெக்டர் ஆயுஸ் வெங்கட் வத்ஸ் தலைமையில் தாசில்தார் மாணிக்கவாசகம், பி.டி.ஓ.க்கள் ராஜேந்திரகுமார், காதர் முகைதீன், உதவி செயற் பொறியாளர் ராமசாமி ஆகியோர் மழை பாதிப்பு வாய்ப்பு பகுதிகளை ஆய்வு செய்தனர்.
ஆய்வில் பிள்ளையார்பட்டியில் கடந்த மழையின் போது மழைநீர் நாகனேந்தல் கண்மாயில் நிரம்பி குடியிருப்பு பகுதியில் சென்றது. அதைத் தடுக்க உபரிநீர் வெளியேற கால்வாய் அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் மற்ற கிராமங்களில் நீர் புக வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டன. அப்பகுதியில் முன்னெச்சரிக்கையாக மணல் மூடைகள், மண் அள்ளும் எந்திரம் தயார்நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டது.

