/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனில் டூவீலர் கட்டணத்திற்கு போலி ரசீது: பொது மக்கள் புகார்

UPDATED : டிச 18, 2025 09:14 AM
ADDED : டிச 18, 2025 05:44 AM

சிவகங்கை: சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனில் போலி ரசீதை கொடுத்து டூவீலர்களுக்கு கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
சிவகங்கையில் இருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சிக்கு செல்லும் அரசு அலுவலர், ஊழியர்கள் தங்களது டூவீலரை ரயில்வே ஸ்டேஷனில், அமைக்கப்பட்ட ஸ்டாண்டில் நிறுத்தி அதற்குரிய கட்டணத்தை செலுத்தி வருகின்றனர்.
இக்கட்டணத்திற்கான ரசீதில் ஒப்பந்ததாரர் பெயர், எவ்வளவு கட்டணம், ஒப்பந்தகாலம் போன்ற விபரங்களுடன்,தெற்கு ரயில்வே நிர்வாக அனுமதியுடன் வசூலிக்க வேண்டும்.
ரயில்வே ஸ்டேஷனில் ஸ்டாண்டிற்குள் நிறுத்தப்படும் டூவீலருக்கு மட்டுமே ரயில்வே நிர்வாகம் நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க வேண்டும். ஆனால், சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனுக்கு டிக்கெட் எடுக்கவும், உறவினர்களை ரயிலில் அனுப்பி வைப்பதற்காக டூவீலரில் வருவோரிடம் கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலிக்கின்றனர். இதற்காக ரயில்வே நிர்வாகம் அனுமதித்த ரசீதை வழங்காமல், போலியாக ரசீது தயாரித்து வழங்கி வருகின்றனர். இது குறித்து மதுரை தெற்கு ரயில்வே வணிக மேலாளர் விசாரித்து, போலி ரசீது மூலம் டூவீலர் கட்டணம் வசூலிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.