/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கால்வாய், களம் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு மக்கள் மனு
/
கால்வாய், களம் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு மக்கள் மனு
கால்வாய், களம் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு மக்கள் மனு
கால்வாய், களம் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு மக்கள் மனு
ADDED : டிச 11, 2024 07:55 AM

மானாமதுரை: மானாமதுரை அருகே கே.கே.,பள்ளம் குரூப்பிற்குட்பட்ட பகுதியில் கால்வாய் மற்றும் களத்தை ஆக்கிரமித்து வேலி அமைத்ததை கண்டித்து 5 கிராம மக்கள் தாலுகா அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.
விவசாயிகள் சங்கத் தலைவர் பில்லத்தி கிருஷ்ணதேவர்,பா.ஜ.,கவுன்சிலர் முனியசாமி (எ) நமகோடி தலைமையில் மானாமதுரை தாசில்தார் கிருஷ்ணகுமாரிடம் மனு வழங்கினர்.
அதில் கூறியிருப்பதாவது: மானாமதுரை தாலுகாவிற்குட்பட்ட கே.கே. பள்ளம் குரூப் சர்வே நம்பர் 287ல் களம் மற்றும் கால்வாய் வழியாக செல்லும் வரத்து கால்வாய் மூலம் உடப்பங்குளம், செய்யாலுார், கே.கே.பள்ளம், விளாக்குளம், பீக்குளம் உள்ளிட்ட 5 கிராம கிராமங்களில் உள்ள 400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்நிலையில் இக்கால்வாய் மற்றும் களம் அமைந்துள்ள பகுதியை வெளி மாநிலத்தைச் சேர்ந்த சிலர் ஆள்மாறாட்டம் செய்தும் போலியாக பத்திரம் பதிவு செய்தும் கால்வாய் மற்றும் களம் இருந்த இடங்களை ஆக்கிரமித்து சுற்றி வேலி அமைத்துள்ளனர்.
கால்வாய் மூடியுள்ளதால் மேற்கண்ட கிராமங்களில் தற்போது நெல் விவசாயம் நடைபெறும் நேரத்தில் பயிர்களுக்கு உரிய தண்ணீர் கிடைக்காமல் பயிர்கள் கருகி வருகிறது.
விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் குறிப்பிட்டுள்ளனர்.

