/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வைகை ஆற்றில் கழிவுநீரால் மக்கள்...முகம் சுழிப்பு: திருப்புவனம் பகுதியில சுகாதாரக்கேடு
/
வைகை ஆற்றில் கழிவுநீரால் மக்கள்...முகம் சுழிப்பு: திருப்புவனம் பகுதியில சுகாதாரக்கேடு
வைகை ஆற்றில் கழிவுநீரால் மக்கள்...முகம் சுழிப்பு: திருப்புவனம் பகுதியில சுகாதாரக்கேடு
வைகை ஆற்றில் கழிவுநீரால் மக்கள்...முகம் சுழிப்பு: திருப்புவனம் பகுதியில சுகாதாரக்கேடு
ADDED : டிச 15, 2025 06:16 AM

திருப்புவனம்:திருப்புவனம் வைகை ஆற்றில் பழைய துணிகள், பூஜை பொருட்களை வீசி எறிவதால் மாசுபடிந்து துர்நாற்றம் வீசி வருகிறது.
காசியை விட அதிகம் புண்ணியம் தரும் ஸ்தலமாக திருப்புவனம் நகரம் போற்றப்படுகிறது. தென் மாவட்டங்களில் இருந்து பலரும் மறைந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் வழங்க திருப்புவனம் வைகை ஆற்றங்கரைக்கு வந்து செல்கின்றனர், நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் நிலையில் வைகை ஆற்றில் பக்தர்கள் சிலர் குளித்து விட்டு அணிந்திருக்கும் ஆடைகளை ஆற்றில் வீசி எறிகின்றனர்.
தினசரி நூற்றுக்கணக்கான பக்தர்கள் வீசி எறியும் ஆடைகளால் வைகை ஆறு முழுவதும் பழைய துணிகளால் நிரம்பி பாசி படர்ந்து துர்நாற்றம் வீசி வருகிறது.
தி.புதூரில் கானூர் படுகை அணை கட்டிய பிறகு அணையில் தண்ணீர் தேக்குவதால் திதி பொட்டல் வரை வைகை ஆற்றில் தண்ணீர் இடுப்பளவு தேங்கி நிற்கிறது.
முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் வழங்க வரும் பக்தர்கள் வைகை ஆற்றினுள் பாறைகள் இருப்பதால் கரையில் இருந்தவாறே பூஜை பொருட்களை வீசி எறிகின்றனர். இதனால் திதி பொட்டல் அருகே துர்நாற்றம் வீசுவதுடன் பழைய துணிகளில் கொசுக்கள், ஈக்கள் உற்பத்தியாகி சுகாதார கேட்டை உருவாக்குகின்றன.
திதி பொட்டலில் பக்தர்களிடம் கட்டணம் வசூலித்து வருகின்றனர். ஆனால் பக்தர்களுக்கு தேவையான எந்த அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை. பேரூராட்சி சார்பில் குளியல் தொட்டி அமைத்ததுடன் சரி வைகை ஆற்றில் வீசி எறியப்படும் குப்பைகளை அகற்றுவதே கிடையாது.
இதனால் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர். நாட்கணக்கில் பழைய துணிகள் வைகை ஆற்றில் கிடப்பதால் தண்ணீரும் அசுத்தமடைவதுடன், சாக்கடை கழிவுகளாக தேங்கிநிற்கிறது.
இதனால் தண்ணீர் மாசுபட்டு நகர்ப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகளிலும் நீரின் சுவையும் நிறமும் மாறி வருகின்றன. எனவே வைகை ஆற்றில் உள்ள குப்பைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

