/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இரவு நேர பஸ்கள் இல்லாததால் வெளியூர் செல்ல முடியாத பயணிகள்
/
இரவு நேர பஸ்கள் இல்லாததால் வெளியூர் செல்ல முடியாத பயணிகள்
இரவு நேர பஸ்கள் இல்லாததால் வெளியூர் செல்ல முடியாத பயணிகள்
இரவு நேர பஸ்கள் இல்லாததால் வெளியூர் செல்ல முடியாத பயணிகள்
ADDED : ஜன 02, 2024 05:22 AM
சிவகங்கை: சிவகங்கையில் இருந்து மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு இரவு நேரங்களில் பஸ்கள் இயக்கப்படாததால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
சிவகங்கையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நகரில் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், மாவட்ட நீதிமன்றம், அரசு கலை கல்லுாரிகள் செயல்படுகின்றன.
இங்கு பணிபுரியும் ஊழியர்கள் மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும் பிற மாவட்டங்களில் இருந்தும் வந்து செல்கின்றனர்.
சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் இருந்து 34 டவுன் பஸ்களும், 32 புறநகர பஸ்களும், சென்னைக்கு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மூலம் ஒரு பஸ்சும் இயக்கப்படுகிறது.
சிவகங்கையில் இருந்து திருப்புத்துாருக்கு இரவு 9:30 மணிக்கும், மானாமதுரைக்கு இரவு 9:45 மாணிக்கும் மதுரைக்கு இரவு 10:45 மணி வரை மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகிறது. அதன் பின்னர் சிவகங்கை நகரில் இருந்து மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கோ, பிற மாவட்டங்களுக்கோ செல்ல முடியாது.
மீண்டும் அதிகாலை 4:00 மணிக்கு தான் பஸ்கள் இயக்கப்படுகிறது. அவசர தேவைக்கு வாடகை கார்களில் தான் செல்ல வேண்டும்.மாவட்ட நிர்வாகம் இரவு நேரங்களில் மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு கூடுதலாக இரவு நேர பஸ்களை இயக்க வேண்டும் என்று பொதுமக்களும் வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

