/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
எங்கள் கோபம் தேர்தலில் எதிரொலிக்கும்
/
எங்கள் கோபம் தேர்தலில் எதிரொலிக்கும்
ADDED : டிச 18, 2025 01:49 AM
சிவகங்கை: பழைய ஓய்வூதிய திட்ட அறிவிப்பை வெளியிடவில்லை என்றால் நிச்சயமாக எங்கள் கோபம் எதிர்வரும் தேர்தலில் பிரதிபலிக்கும் என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவரும் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளருமான இளங்கோவன்- எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது: 2003 ஏப்.1 முதல் நடைமுறை படுத்தப்பட்ட பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 22 ஆண்டுகளாக அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் போராடி வருகின்றனர்.
2019ல் ஜாக்டோ ஜியோ போராட்டம் நடத்தியபோது எதிர்கட்சி தலைவர் இன்றைய முதல்வர் தி.மு.க.,, தலைமையிலான அரசு அமைந்ததும் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறை படுத்தப்படும் என்றார். ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட தமிழகத்தில் செயல்படும் அனைத்து சங்கங்களும் போராடியதால் ககன்தீப்சிங் பேடி தலைமையில் மூவர் குழு அமைக்கப்பட்டது. அக்குழு 178 சங்கங்களை நேரில் அழைத்து கருத்து கேட்டு செப்.30க்குள் அறிக்கையினை அரசுக்கு வழங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி டிச.13 தமிழக முழுவதும் போராட்டம் நடத்தினோம். ஜன.6 முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்த திட்டமிட்டு தலைமைச் செயலாளரிடம் நேரில் கடிதம் கொடுத்துள்ளோம். முதல்வர் எங்களை அழைத்து பேசி பழைய ஓய்வூதிய திட்ட அறிவிப்பை வெளியிடவில்லை என்றால் நிச்சயமாக எங்கள் கோபம் எதிர்வரும் தேர்தலில் பிரதிபலிக்கும் என்றார்.

