/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கண்மாய் அடைப்பு பிரச்னை சமரசம் பேசிய அதிகாரிகள்
/
கண்மாய் அடைப்பு பிரச்னை சமரசம் பேசிய அதிகாரிகள்
ADDED : அக் 23, 2024 05:47 AM
நாச்சியாபுரம் : கல்லல் ஒன்றியம் கருகுடி கண்மாய் அண்மையில் பெய்த மழையில் பெருகியது. இதனால் நீர்ப்பிடிப்பு பகுதியில் நீர் நிரம்பியது.
அதில் பக்கத்து கிராமத்தினர் கண்மாயை அடைத்ததால் தங்கள் பயிர்கள் பாதிப்பதாக கிராமத்தினர் வி.ஏ.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதிகாரிகள் சமாதானம் செய்து அனுப்பினர். இருதரப்பினரையும் சமாதானக் கூட்டத்திற்கு அழைத்திருந்தனர்.
மேலமாகாணத்தை சேர்ந்தவர்கள் மாலை 4:00 மணிக்கு வந்தனர். கருகுடி தரப்பினர் வரவில்லை. பின்னர் தாசில்தார் அலுவலகத்திற்கு வந்த கருகுடி தரப்பிலான பெண்கள் அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்க கோரினர்.
தாசில்தார் மாணிக்கம் வாசகம் கூறுகையில், கண்மாயில் பொதுப்பணித்துறை அமைத்துள்ள கலுங்கின்படி நீர் நிரம்பியுள்ளது. வேறு யாரும் தண்ணீரை தேக்க எதுவும் செய்ய வில்லை. நீர்ப்பிடிப்பில் பயிர்கள் சாகுபடி செய்ததாக கடந்த 3 ஆண்டுகளாக தகவல் இல்லை. வழக்கமான நடைமுறைப்படியே கண்மாயில் நீர் தேக்கப்பட்டுள்ளது.' என்று கூறி சமாதானப்படுத்தினார். பின்னர் பெண்கள் கலைந்து சென்றனர்.

