sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் மனுக்களுக்கு தீர்வு இல்லை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் புகார்

/

 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் மனுக்களுக்கு தீர்வு இல்லை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் புகார்

 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் மனுக்களுக்கு தீர்வு இல்லை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் புகார்

 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் மனுக்களுக்கு தீர்வு இல்லை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் புகார்


ADDED : நவ 29, 2025 05:02 AM

Google News

ADDED : நவ 29, 2025 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: உங்களுடன் ஸ்டாலின் முகாமில் வழங்கப்பட்ட மனுக்களுக்கு தீர்வு இல்லை என

மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் புகார் தெரிவித்தார்.

காரைக்குடி மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. மேயர் முத்துத்துரை தலைமையேற்றார். கமிஷனர் சங்கரன், துணை மேயர் குணசேகரன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினராக கருணாநிதி தேர்வு செய்யப்பட்டார்.

3வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் மைக்கேல்; வார்டில் நடக்கும் வேலை குறித்து சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களிடம் தெரிவிப்பதில்லை. மன்றத்தில் வைக்கப்படும் பொருளுக்கு சரியான விளக்கம் இல்லை. உரிய விளக்கத்துடன் பொருள் வைக்க வேண்டும்.

மேயர் முத்துத்துரை : வார்டில் பணி நடைபெறும் முன்பு ஒப்பந்தகாரர்கள் சம்பந்தப்பட்ட வார்டு கவுன்சிலர்களிடம் தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

7வது வார்டு கவுன்சிலர் குருபாலு: பாதாள சாக்கடை பணி முடிந்து 3 மாதமாகிறது.சாலை அமைக்கப்படவில்லை.போலீஸ் காலனி அருகே கால்வாய் சுத்தம் செய்ய பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. பாலம் கட்டும் பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிதியில் பணி நடைபெறுவது கடினம். நேரடியாக ஆய்வு செய்து, போதிய நிதியை ஒதுக்கி பால பணியை முடிக்க வேண்டும்.

11 வது வார்டு கவுன்சிலர் மெய்யர் : மக்களை சபா கூட்டம் என்று கூறி கிளப்பி விட்டீர்கள். ஆனால் அவர்கள் தெரிவித்த எந்த வேலையும் இதுவரை செய்யவில்லை. நீங்களாகவே வேலை தேர்வு செய்து பார்க்கிறீர்கள். பழைய பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

துணை முதல்வர் உதயநிதி பழைய பஸ் ஸ்டாண்டில் நடக்கும் புதிய கட்டடப் பணி குறித்து பார்வையிட்டார். என்ன தெரிவித்தார் என்று சொல்ல முடியுமா.

அதற்கான பணிகள் நடைபெறாத நிலையில் கூடுதலாக ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட மனுக்களுக்கு எந்த நடவடிக்கையும் இல்லை. எம்.பி., எம்.எல்.ஏ., நிதியைப் பெற்றுக் கொள்ளும் மாநகராட்சியினர் அவர்களை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்காமல் புறக்கணிப்பு செய்கிறீர்கள். இதனால் மீண்டும் எம்.எல்.ஏ., நிதி கேட்டால், நிதி பெற்றுக் கொள்கிறீர்கள் .ஆனால் எதற்கும் அழைப்பதில்லை என்று தெரிவிக்கின்றனர்.

கமிஷனர் சங்கரன் கூறுகையில்: புதிதாக கட்டப்பட்டுள்ள பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா குறித்து துணை முதல்வர் கேட்டறிந்தார்.

ஆனால் பணிகள் தாமதமாக நடந்து வருகிறது. பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்கு தனி நிதி.

கால்வாய் கட்டும் பணிக்கு தனியாக நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி மூலம் பெறப்பட்ட 800 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. சபா கூட்டத்தில் கூறப்பட்ட 62 பணிகள் நடைபெற உள்ளது.

36 வது வார்டு கவுன்சிலர் தனம்: கவுன்சிலர்கள், அதிகாரிகளை அலைபேசியில் தொடர்பு கொண்டால் மதிப்பதே கிடையாது. 36 வது வார்டுக்கு எந்த பணிகளும் வழங்காமல் புறக்கணிக்கப்படுகிறது. டெண்டர் விடப்பட்ட பணியும் நடைபெறவில்லை. 8 மாதமாக எந்த பணியும் நடைபெறவில்லை. ரயில்வே அருகே பாலம் அமைக்க கோரிக்கை விடுத்தோம் எந்த நடவடிக்கையும் இல்லை. எந்தப் பணியாக இருந்தாலும் முதலில் இருக்கும் 15 வார்டுகளோடு நின்று விடுகிறது, 36 வது வார்டில் இருந்து பணிகளை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

20வது வார்டு கவுன்சிலர் தேவன் : மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினரை எதன் அடிப்படையில் நியமித்தீர்கள் என தெளிவு படுத்த வேண்டும். கட்சி சார்ந்தவரா? கட்சி சாராதவரா.






      Dinamalar
      Follow us