/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் தேர்வுத்துறை புது உத்தரவு

ADDED : ஏப் 12, 2025 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை,:தமிழகத்தில் 10ம் வகுப்பு அரசு பொது தேர்வு மார்ச் 28 ல் துவங்கியது. ஏப்., 15 ல் முடிகிறது. ஏப்., 21 முதல் விடைத்தாள்கள் திருத்தும் பணி துவங்குகிறது.
கடந்த கல்வி ஆண்டில் இத்தேர்வு நடத்தப்பட்டபோது பெரும்பாலான மாவட்டங்களில் ஆசிரியர் பற்றாக்குறையால், தமிழ் மீடிய மாணவர்களின் விடைத்தாள்களை ஆங்கில மீடிய ஆசிரியர்கள் திருத்தியதாக புகார் எழுந்தது. இந்தாண்டு இந்த சர்ச்சையை தவிர்க்கும் வகையில் தமிழ், ஆங்கில மீடிய மாணவர்களின் விடைத்தாள்களை சம்பந்தப்பட்ட மீடிய ஆசிரியர்களே திருத்த வேண்டும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.