/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
டிப்பர் லாரிகளால் சேதமாகும் நாட்டரசன்கோட்டை ரோடு பொதுமக்கள் அவதி
/
டிப்பர் லாரிகளால் சேதமாகும் நாட்டரசன்கோட்டை ரோடு பொதுமக்கள் அவதி
டிப்பர் லாரிகளால் சேதமாகும் நாட்டரசன்கோட்டை ரோடு பொதுமக்கள் அவதி
டிப்பர் லாரிகளால் சேதமாகும் நாட்டரசன்கோட்டை ரோடு பொதுமக்கள் அவதி
ADDED : அக் 23, 2024 05:46 AM

சிவகங்கை : சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில், கிராவல் குவாரி லாரிகள் அதிக எடையுடன் செல்வதால் ஒக்கூர் மெயின்ரோடு பல ஆண்டாக குண்டும் குழியுமாக கிடக்கிறது.
நாட்டரசன்கோட்டையில், மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் ஒக்கூர் மெயின் ரோடு உள்ளது. ஆன்மிக சுற்றுலா வரும் பயணிகள் நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மனை தரிசனம் செய்து, வாகனங்களில் ஒக்கூர் ரோடு வழியாக ஒக்கூர், மதகுபட்டி, திருக்கோஷ்டியூர் ஆன்மிக தலத்திற்கு சென்று வருகின்றனர்.
இது தவிர பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் சைக்கிளில் இந்த குண்டும் குழியுமான ரோட்டில் தான் பயணிக்கின்றனர். இதனால், அடிக்கடி பள்ளத்தில் வாகனங்கள் விழுந்து விபத்துக்களும் நேரிடுகிறது.
கிராவல் மண் லாரிகள் சேதம்
குறிப்பாக நாட்டரசன்கோட்டை அருகே உள்ள பகுதிகளில் இருந்து ஒக்கூர் வழியாக வெளி மாவட்டங்களுக்கு டிப்பர் லாரிகளில் கிராவல் மண் எடுத்து செல்கின்றனர். தினமும் இரவு, பகலாக இந்த ரோட்டில் நுாற்றுக்கும் மேற்பட்ட முறைகளில் டிப்பர் லாரிகள், கிராவல் மண்ணுடன் செல்கிறது.
இதனால், ரோடு மேலும் சேதமாகி, வாகனங்கள் பயணிக்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பல முறை கலெக்டரிடம் புகார் செய்து விட்டனர். நாட்டரசன்கோட்டையில் உள்ள ஒக்கூர் மெயின் ரோட்டை சேதப்படுத்தும், கிராவல் மண் டிப்பர் லாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என மக்கள் புகார் அளிக்கின்றனர்.
தார்ரோடு போட ரூ.90 லட்சம்
மாநில நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் சையது இப்ராகிம் கூறியதாவது: இந்த ரோட்டை புதுப்பிக்க ரூ.90 லட்சம் நிதி ஒதுக்கீடு கேட்டு, அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம்.
நிதி வந்ததும், புதிதாக தார் ரோடு போடப்படும். இந்த ரோட்டில் கிராவல் மண் எடுத்து செல்லும் டிப்பர் லாரிக்கு தடை விதிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம், என்றார்.

