/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆட்சியின் மீது குறைகூற முடியாமல் தனக்கு தானே அடித்து கொள்கிறார்கள் அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு

ADDED : டிச 29, 2024 04:23 AM
திருப்புத்தூர்: தமிழக அரசின் ஆட்சி மீது குறைசொல்ல முடியாமல், தனக்கு தானே தண்டனை கொடுத்து கொள்கிறார்கள் என சிவகங்கை மாவட்டம் திருப்புத்துாரில் அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
இங்கு நடந்த மாவட்ட செயற்குழு கூட்டத்தில் அவர் பேசியதாவது, வேறு எந்த மாநிலத்திலும் தி.மு.க.,விற்கு இணையாக ஆட்சியோ, கட்சியோ இல்லை. இது எதிர்கட்சியினருக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்த அரசு மீது எந்தவித குறையும் கூற முடியவில்லை.
ஆங்காங்கே சில விரும்பதகாத சம்பவங்கள் நடக்கலாம். அதை தடுக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கிறது. ஆனால், சிலர் இதை பெரியதாக்கி அரசியல் செய்கின்றனர். சிலர் அரசியல் பக்குவம் இன்றி தன் மீது சாட்டையால் அடித்து கொள்கின்றனர். மிகப்பெரிய மாநிலத்தில் இது போன்ற சம்பவம் நடக்கும் போது, அதை ஒடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பா.ஜ., ஆட்சியில் உள்ள மாநிலங்களில் பல சம்பவம் நடக்கிறது. அதற்கு நாம் குறை சொல்லவில்லை, என்றார்.