ADDED : டிச 21, 2025 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் மாங்குடி ஊ.ஓ.நடுநிலைப்பள்ளியில் கணிதநாள் விழா நடந்தது.
வட்டாரக்கல்வி அலுவலர் ரெ.லெட்சுமிதேவி தலைமை வகித்து துவக்கினார். கிராமத் தலைவர் பி.பாண்டியன், துளையானுார் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சி.முத்துக்கருப்பன், ஆசிரியர் பயிற்றுநர் ப.மீனாட்சி முன்னிலை வகித்தனர்.
தலைமையாசிரியர் எல்.மார்கரெட் சாந்தகுமாரி வரவேற்றார். ஆலம்பட்டி தலைமையாசிரியர் க.ஸ்ரீதர்ராவ், அச்சுக்கட்டு ஆசிரியர் லெட்சுமணன், புதுவளவு ஆசிரியர் சங்கர், மேலாண்மைக்குழு தலைவி அம்பிகாதர்மராஜன்,பெற்றோர் கழக தலைவி சாந்தி ராமனாதனர் வாழ்த்தினர்.
மாணவர்கள் தங்கள் கணிதம் சார்ந்த படைப்புகளை காட்சிப்படுத்தி பார்வையாளர்களுக்கு விளக்கம் அளித்தனர்.

