/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மஞ்சப்பை விழிப்புணர்வு பாடல் சுகாதார அலுவலரின் வீடியோ
/
மஞ்சப்பை விழிப்புணர்வு பாடல் சுகாதார அலுவலரின் வீடியோ
மஞ்சப்பை விழிப்புணர்வு பாடல் சுகாதார அலுவலரின் வீடியோ
மஞ்சப்பை விழிப்புணர்வு பாடல் சுகாதார அலுவலரின் வீடியோ
ADDED : டிச 13, 2024 04:25 AM

சிவகங்கை: பிளாஸ்டிக் பைகளின் தீமை,மஞ்சப்பை நன்மை குறித்து விழிப்புணர்வு பாடலை பாடி வலை தளங்களில் வைரல் செய்து வருகிறார் சிவகங்கை நகராட்சி சுகாதார அலுவலர் அப்துல்ஜாபர்.
இவர் தென்காசி,திருவள்ளூர், ஆவடி, கடலுார் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார அலுவலராக பணியாற்றியுள்ளார்.
அரசு பணியில் இருந்து கொண்டே மக்களுக்கான செய்திகளை விழிப்புணர்வு பாடலாக பாடி அவற்றை அந்தந்த நகராட்சியில் வலைதளங்களில் வைரல் செய்கிறார். இதுவரை 145 விழிப்புணர்வு பாடல்களை பாடி பாராட்டுகளை பெற்றுள்ளார்.
7 கலெக்டர்களிடம் இருந்து 67 க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார். கடந்த மாதம் கடலுாரில் இருந்து சிவகங்கை நகராட்சிக்கு சுகாதார அலுவலராக பணி மாறுதலில் வந்தார்.
சிவகங்கையில் மக்கள் விழிப்புணர்வு பெறும் வண்ணமாக ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் பல்வேறு உடல் நலத் தீங்கு ஏற்படும்.
மக்கள் அனைவரும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மஞ்சப்பை பயன்படுத்துவோம் என்று அவரே சொந்தமாக எழுதி பாடிய பாடலை வலைதளங்களில் வைரல் செய்து வருகிறார்.

