/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் 4 மணி நேர மின்தடையால் அவதி
/
மானாமதுரையில் 4 மணி நேர மின்தடையால் அவதி
ADDED : நவ 12, 2024 05:04 AM
மானாமதுரை: மானாமதுரையில் நேற்று நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மின்வெட்டினால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் அவதிக்குள்ளாகினர்.
மானாமதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்யும் நேரங்களில் அவ்வப்போது மின்வெட்டு ஏற்பட்டது.மேலும் கிராம பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டால் அதனை சரி செய்ய தாமதம் ஆவதால் கிராம விவசாயிகள் பயிர்களுக்கு உரிய நேரத்தில் தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை உள்ளதால் பயிர்களும் கருகி வருவதால் வேதனைக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மானாமதுரையில் காலை 10:00 மணிக்கு ஏற்பட்ட மின்தடை மதியம் 2:00 மணி வரை நீடித்ததால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் அவதிக்கு உள்ளாகினர்.வாரத்தின் முதல் வேலை நாளான திங்கள்கிழமை பல்வேறு பணிகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: மானாமதுரை துணை மின் நிலையத்திலிருந்து சிப்காட் தொழிற்பேட்டைக்கு தனியாக மின்விநியோகம் வழங்கும் பணி நடைபெற்றதால் மின்வெட்டு நீடித்ததாக தெரிவித்தனர்.

