sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் இன்று கும்பாபிேஷகம்

/

இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் இன்று கும்பாபிேஷகம்

இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் இன்று கும்பாபிேஷகம்

இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் இன்று கும்பாபிேஷகம்


ADDED : நவ 02, 2025 10:30 PM

Google News

ADDED : நவ 02, 2025 10:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளையான்குடி: இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் இன்று நவ.3ம் தேதி மகா கும்பாபிஷேக விழாவும், மாலை 5:00 மணிக்கு திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.

சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் திருப்பணிகள் முடிவு பெற்றதை தொடர்ந்து கும்பாபிஷேக விழாவிற்காக அக்.31ம் தேதி காலை 8:00 மணி முதல் 10:30 மணிக்குள் அனுக்கை, விக்னேஸ்வர பூஜை வாஸ்து சாந்தியுடன், மாலை 6:00 மணிக்கு முதலாம் கால யாகசாலை பூஜை துவங்கியது.

இதனை தொடர்ந்து 4நாட்கள் 6 கால யாக சாலை மற்றும் பல்வேறு பூஜைள் நடைபெற்றன.

இன்று நவ.3ம் தேதி காலை 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி காலை 9:30 முதல் 10:25 மணிக்குள் மூலஸ்தானம், ராஜகோபுரம், பரிவார தெய்வ கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

இதனைத் தொடர்ந்து அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, அன்னதானம் நடைபெற உள்ளது.

மாலை 5:00 மணிக்கு ஞானாம்பிகை சமேத ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கல்யாணமும், இரவு 9:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெறும்.






      Dinamalar
      Follow us