/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கருப்பூர் கூத்த அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்
/
கருப்பூர் கூத்த அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்
ADDED : பிப் 20, 2024 12:17 AM
திருப்புத்துார், - திருப்புத்துார் ஒன்றியம்கருப்பூரில் பொன்னரசு கூத்த அய்யனார், அஞ்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
கருப்பூர் அய்யனார் கோயிலில் 13 ஆண்டுகளுக்கு பின்னர் திருப்பணி நடந்தது. கும்பாபிேஷகத்தை முன்னிட்டு பிப்.17ல் யாகசாலை பூஜைகள் துவங்கின. பரிவார தேவதைகளுக்கும் யாக குண்டங்கள் வைத்து சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜையை நடத்தினர்.
நேற்று காலை 4-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. பின்னர் யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடாகி, கோயிலை வலம் வந்து கோபுர விமானத்திற்கு வந்தடைந்தது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கலசங்களுக்கு புனிதநீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து தீபாராதனைக் கு பின் மூலவர்களான பொன்னரசு கூத்த அய்யனார், பூர்ணா தேவி, புஷ்கலா தேவி ஆகியோருக்கும், பரிவாரதெய்வங்களான விநாயகர், பாலமுருகன் அஞ்சியம்மாள், பெரிய கருப்பர், சின்ன கருப்பர், சப்த கன்னிமார்கள், மதகடி காளி, ஆண்டிச்சாமி, நொண்டி கருப்பர் உள்ளிட்ட தெய்வங்களுக்கும் மகா அபிேஷகம் நடந்தது.
பொன்னம்பல அடிகள், கொல்லிமலை குணசேகர சுவாமி பங்கேற்றனர். கருப்பூர், முறையூர், ஆலம்பட்டி, திருக்களாப்பட்டி, அய்யாபட்டி, ரணசிங்கபுரம் உள்ளிட்ட பல கிராமத்தினர் மரியாதை செலுத்தினர். ஏற்பாட்டினை கருப்பூர் கிராமத்தினர் செய்தனர்.

