
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை, : அகில இந்திய இளைஞர் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் அகில இந்திய அளவில் சிலம்ப போட்டி டெல்லியில் நடந்தது.
45 கிலோ எடை 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பங்கேற்ற தேவகோட்டை சின்னப்பன் வித்யாமந்திர் மெட்ரிக் பள்ளி மாணவர் அகிலன் முதலிடம் பெற்றார்.
மாணவர் அகிலனுக்கு பாராட்டு பள்ளி தலைவர் ஆரோக்கிய அருள் செல்வன் தலைமையில் நடந்தது. தாளாளர் கணேசன் முன்னிலை வகித்தார். பள்ளி பொருளாளர் பெர்டின் சேவியர் பாராட்டி பரிசு வழங்கினார். பள்ளி முதல்வர் ரகுவீரன், உடற் கல்வி ஆசிரியர் ஜாஸ்மின் பங்கேற்றனர்.

